×

மணவூர் ரயில் நிலையம் – சின்னம்மாபேட்டை ஜல்லிகற்களாக காட்சியளிக்கும் தார் சாலை: சீரமைக்க கோரிக்கை

 

திருத்தணி: மணவூர் ரயில் நிலையம் – சின்னம்மாபேட்டை வரையிலான தார்ச்சாலை 4 கி.மீ. தூரம் கொண்டது. இந்த சாலை வழியாக தினமும், 6 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் இருசக்கரம் மற்றும் நான்கு சக்கர வாகனத்தில் திருவள்ளூ, கடம்பத்தூர், அரக்கோணம், ஸ்ரீ பெரும்புதூர் உள்ளிட்ட பல்வேறு நகரங்களுக்கு சென்று வருகின்றனர். இந்நிலையில், கடந்த 2 ஆண்டுகளாக மணவூர் ரயில் டிக்கெட் கவுண்டரில் இருந்து தொழுதாவூர் வரையிலான 3 கி.மீ. சாலை மிகவும் சேதமடைந்து ஜல்லி பெயர்ந்து மேடு பள்ளமாக காட்சியளிக்கிறது.

இதுவரை சேதமடைந்த சாலையால் பல்வேறு விபத்துகளில் 20க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர். மேலும், வாகன ஓட்டிகள் தாமாக விபத்தில் சிக்குவதால் அவதிப்படுகின்றனர்.
எனவே, வாகன ஓட்டிகள் சென்றுவர லாயக்கற்ற நிலையில் தார்ச்சாலை உள்ளது. இதனை, உடனடியாக சீரமைத்து தர வேண்டும் என வாகன ஓட்டிகள் மற்றும் பொது மக்கள் கோரிக்கை வைத்துள்ளனர். இதுகுறித்து விரைவில் சாலை சீரமைக்கபப்டும் என திருத்தணி கோட்ட நெடுஞ்சாலை துறை அதிகாரி தெரிவித்துள்ளார்.

The post மணவூர் ரயில் நிலையம் – சின்னம்மாபேட்டை ஜல்லிகற்களாக காட்சியளிக்கும் தார் சாலை: சீரமைக்க கோரிக்கை appeared first on Dinakaran.

Tags : Manavur Railway Station ,Chinnammapet Tarred Road ,Chinnammapet ,Dinakaran ,
× RELATED பல்பொருள் அங்காடியில் பணம், மளிகைப் பொருட்கள் திருட்டு: போலீசார் விசாரணை