×

டிவிட்டருக்கு போட்டியாக மெட்டா நிறுவனத்தின் புதிய செயலி ‘த்ரெட்ஸ்’

லண்டன்: சமூக ஊடகத்தளங்களில் மிகவும் புகழ்பெற்ற டிவிட்டர் நிறுவனத்தை எலான் மஸ்க் கைப்பற்றியதிலிருந்து பயனர்களுக்கு பல்வேறு புதிய கட்டுப்பாடுகளை விதித்து வருகிறார். இந்நிலையில் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம் ஆகிய சமூக வலைதளங்களை நடத்தும் மெட்டா நிறுவனம் டிவிட்டருக்கு போட்டியாக ‘த்ரெட்ஸ்’ என்ற மைக்ரோ பிளாக்கிங் செயலியை அறிமுகப்படுத்தி உள்ளது. இந்த செயலி மூலம் பயனர்கள் தங்களுக்கு பிடித்தமான கணக்குகளை பின்தொடரலாம். இன்ஸ்டாகிராமில் பயன்படுத்தும் அதேபெயரை பயன்படுத்தி கணக்கை தொடர அனுமதிக்கப்படும் என மெட்டா நிறுவனம் அறிவித்துள்ளது. இது சமூக வலைதளத்தை அதிகம் பயன்படுத்துவோர் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

ஆப்பிள் நிறுவனத்தின் ஆப் ஸ்டோரில் ‘த்ரெட்ஸ்’ செயலி இடம்பெற்றுள்ளது. ஆனால் கூகுள் ப்ளே ஸ்டோரில் இந்த செயலி எப்போது அறிமுகப்படுத்தப்படும் என மெட்டா நிறுவனம் இதுவரை அதிகாரப்பூர்வ அறிவிப்பை வௌியிடவில்லை. இருந்தபோதும் ட்விட்டரின் கெடுபிடிகளுக்கிடையே புதிய செயலியை எதிர்பார்த்து சமூக வலைதள பயனர்கள் ஆர்வமுடன் காத்துள்ளனர்.

The post டிவிட்டருக்கு போட்டியாக மெட்டா நிறுவனத்தின் புதிய செயலி ‘த்ரெட்ஸ்’ appeared first on Dinakaran.

Tags : Meta ,Twitter ,London ,Elon Musk ,
× RELATED இந்தியருக்கு 16 ஆண்டு சிறை