×

முருக்கம்பட்டு ரயில்வே சுரங்கப்பாதை அவலம்: தேங்கிக்கிடக்கும் மழைநீரை அகற்ற கோரிக்கை

திருத்தணி: முருக்கம்பட்டுரயிவே சுரங்கப்பாதையில் தேங்கும் தண்ணீரால் விவசாயிகள் பாதிக்கப்படுவதாக அச்சம் தெரிவித்துள்ளனர். இந்தியா முழுவதும் நகர மற்றும் கிராமப்புறங்களை இணைக்கும் வகையில் ரயில்வே பாதை அமைக்கப்பட்டுள்ளன. இந்த ரயில் பாதைகளில் சரக்கு வாகனங்கள் செல்வதற்கும் மற்றும் விரைவு ரயில்கள் செல்வதற்கும் ரயில்வே தண்டவாளங்கள் அமைக்கப்பட்டு உள்ளன.

இதேபோல், நகரங்களில் ஒட்டி பகுதிகளில் இருந்து மின்சார ரயில்கள் இயக்கப்பட்டும் வருகிறது. மேலும், இந்தியாவில் வந்தே பாரத் போன்ற அதிவிரைவு ரயில்கள் இயக்கப்பட்டு வருகிறது. இதனால் தற்போது பல பகுதிகளில் ரயில்வே கேட்டுகள் அமைக்கப்பட்டுள்ளன. இந்த ரயில்வே கேட் பூட்டியிருந்தாலும், இரு சக்கர வாகன ஓட்டிகள் மற்றும் பாதசாரி்கள் கேட் கடக்கும் போது, விரைவு ரயில், சரக்கு ரயில் சிக்கி இறக்கின்றனர்.

இதனால், உயிரிழப்புகள் ஏற்படுவதுடன் ரயில்களும் காலதாமதமாக செல்லும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது. இதனால், ரயில்கள் குறிப்பிட்ட நேரத்தில், குறிப்பிட்ட இடத்திற்கு செல்ல முடியவில்லை. இதனால் ரயில் பயணிகள் மற்றும் சரக்கு வாகனங்கள் பெரிதும் பாதிக்கப்படுகின்றனர். இதன் காரணமாக, அனைத்து ரயில்வே கேட்டுகளும் ஊழியர்கள் கொண்டு இயக்கப்படுகிறது. இதனால், ரயில்வே நிர்வாகத்திற்கு, கூடுதல் செலவாகிறது. இதை தவிர்ப்பதற்காக ரயில்வே கேட் உள்ள அருகே பல லட்சம் மதிப்பீட்டில் ரயில்வே சுரங்கப்பாதை அமைத்து வருகின்றனர்.

இதில், மாநகர பகுதிகள் என்றால் மேம்பாலம் அமைத்து வருகிறது. நகர மற்றம் கிராம பகுதிகளில் சுரங்க பாதை அமைக்கப்பட்டு வருகிறது. தற்போது, இதுபோன்ற சுரங்கப் பாதை சென்னை- திருப்பதி மார்க்கத்தில் திருத்தணி அடுத்த எம்.ஜி.ஆர் நகர், முருக்கம்பட்டு மற்றும் சிங்கராஜபுரம் ஆகிய பகுதிகளில் பல லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் சுரங்கபாதைகள் அமைக்கப்பட்டுள்ளன. இந்த சுரங்கப்பாதையில் பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகள் சென்று வருகின்றனர். தற்போது, சிறிது நேரம் மழை பெய்தால் கூட தண்ணீர், சுரங்கப்பாதையில் 5 அடி, 7 அடி வரை தண்ணீர் தேங்கி நிற்கிறது.

இதனால் வாகன ஓட்டிகள் மற்றும் பொதுமக்கள் கடந்து செல்ல முடியாத நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். சுரங்கப்பாதையில் தேங்கும் தண்ணீரை மின்மோட்டார் வைத்து வெளியேற்றினாலும் பல மணி நேரம் ஆவதுடன், பல லட்சம் ரூபாய் செலவாகும். எனவே, முன்னெச்சரிக்கையாக சுரங்கபாதை இருக்கும் இடத்தில் மேற்கூரைகள் அமைத்து, மழைநீர் உள்ளே போகாதவாறு ரயில்வே நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும். இந்த சுரங்க பாதை சுற்றிலும் விவசாய நிலம் உள்ளது. இங்கு தேங்கும் மழை நீரை மின்மோட்டார் வைத்து வெளியேற்றினால் அருகில் உள்ள விவசாய நிலம் பாதிக்கப்படும் என விவசாயிகள் அச்சம் தெரிவித்து கிராம மக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

The post முருக்கம்பட்டு ரயில்வே சுரங்கப்பாதை அவலம்: தேங்கிக்கிடக்கும் மழைநீரை அகற்ற கோரிக்கை appeared first on Dinakaran.

Tags : Murukampatu ,Thiruthani ,Murukampatturaive ,India… ,Dinakaran ,
× RELATED சவ ஊர்வலத்தின்போது பட்டாசு வெடித்தவரின் கைவிரல் துண்டானது