×

31 ரன் வித்தியாசத்தில் ஜிம்பாப்வே அணியை வீழ்த்தியது ஸ்காட்லாந்து

புலவாயோ: உலக கோப்பை தகுதிச்சுற்று சூப்பர் 6 ஆட்டத்தில், ஸ்காட்லாந்து அணி 31 ரன் வித்தியாசத்தில் ஜிம்பாப்வே அணியை வீழ்த்தியது. குயின்ஸ் ஸ்போர்ட்ஸ் கிளப் மைதானத்தில் நேற்று நடந்த இப்போட்டியில், டாஸ் வென்ற ஜிம்பாப்வே முதலில் பந்துவீசியது. ஸ்காட்லாந்து 50 ஓவரில் 8 விக்கெட் இழப்புக்கு 234 ரன் குவித்தது. லீஸ்க் 48, கிராஸ் 38, மெக்கல்லன் 34, முன்சி 31, மெக்பிரைட் 28, மார்க் வாட் 21* ரன் எடுத்தனர். ஜிம்பாப்வே பந்துவீச்சில் வில்லியம்ஸ் 3, சதாரா 2, என்காரவா 1 விக்கெட் வீழ்த்தினர்.

அடுத்து களமிறங்கிய ஜிம்பாப்வே, கிறிஸ் சோல் வேகப் பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் 7.5 ஓவரில் 37 ரன்னுக்கு 4 விக்கெட் இழந்து திணறியது. கடுமையாகப் போராடிய சிக்கந்தர் 34 ரன், வெஸ்லி 40 ரன், ரயன் பர்ல் 83 ரன் (84 பந்து, 8 பவுண்டரி, 1 சிக்சர்) விளாசி பெவிலியன் திரும்ப, மற்ற வீரர்கள் ஒற்றை இலக்க ரன்னில் அணிவகுத்தனர். ஜிம்பாப்வே 41.1 ஓவரில் 203 ரன்னுக்கு ஆல் அவுட்டானது. ஸ்காட்லாந்து பந்துவீச்சில் கிறிஸ் சோல் 3, மெக்கல்லன், லீஸ்க் தலா 2, ஷரிப், வாட், கிரீவ்ஸ் தலா 1 விக்கெட் வீழ்த்தினர். கிறிஸ் சோல் ஆட்ட நாயகன் விருது பெற்றார். 31 ரன் வித்தியாசத்தில் வென்ற ஸ்காட்லாந்து அணி உலக கோப்பை பிரதான சுற்றுக்கு முன்னேறும் வாய்ப்பை தக்கவைத்த நிலையில், ஜிம்பாப்வே அணி ஏமாற்றத்துடன் வெளியேறியது. ஸ்காட்லாந்து தனது கடைசி சூப்பர் 6 லீக் ஆட்டத்தில் நாளை நெதர்லாந்து அணியை சந்திக்கிறது.

The post 31 ரன் வித்தியாசத்தில் ஜிம்பாப்வே அணியை வீழ்த்தியது ஸ்காட்லாந்து appeared first on Dinakaran.

Tags : Scotland ,Zimbabwe ,Bulawayo ,World Cup Qualifier Super 6 ,Dinakaran ,
× RELATED இங்கிலாந்து நீர்வீழ்ச்சியில் மூழ்கி 2 இந்திய மாணவர்கள் பலி