×

காசோலை மோசடி வழக்கில் பாஜ மாவட்ட பொதுச்செயலாளர் கருணாகரனுக்கு 6 மாதம் சிறை: திருவள்ளூர் நீதிமன்றம் உத்தரவு

சென்னை: காசோலை மோசடி வழக்கில் பாஜ மாவட்ட பொதுச்செயலாளர் கருணாகரனுக்கு 6 மாதம் சிறை தண்டனை வழங்கி திருவள்ளூர் ஒருங்கிணைந்த நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. திருவள்ளூர் பாஜ மேற்கு மாவட்ட பொது செயலாளராக கருணாகரன் உள்ளார். இவர் ‘கர்ணா’ என்ற பெயரில் ஹார்டுவேர்ஸ் கடை நடத்தி வந்தார். அப்போது கூலிபாளையம் பகுதியை சேர்ந்த நாராயணன் என்பவர் கருணாகரனிடம் பெருமளவு பணத்தை முதலீடு ெசய்ததாக கூறப்படுகிறது. கடந்த 2016ம் ஆண்டு கருணாகரனின் ஹார்டுவேர்ஸ் கடையில் தீவிபத்து ஏற்பட்டு கடையில் இருந்த பொருட்கள் அனைத்தும் எரிந்து நாசமானதாக கூறப்படுகிறது.

இதனால் கருணாகரன், நாராயணனுக்கு கொடுக்க வேண்டிய பணத்திற்கு காசோலை கொடுத்துள்ளார். அந்த காசோலையை வங்கியில் செலுத்திய போது, பணம் இல்லாமல் திரும்பி வந்துள்ளது. இந்நிலையில் காசோலை ேமாசடி செய்ததாக நாராயணன் திருவள்ளூர் நகர காவல் நிலையத்தில் கடந்த 2019ம் ஆண்டு பாஜ மேற்கு மாவட்ட பொதுச்செயலாளராக உள்ள கருணாகரன் மீது புகார் அளித்தார். புகாரின் மீது போலீசார் விசாரணை நடத்தி கருணாகரன் மீது திருவள்ளூர் ஒருங்கிணைந்த நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தனர்.

இந்நிலையில் காசோலை மோசடி வழக்கு திருவள்ளூர் ஒருங்கிணைந்த நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. அப்போது இருதரப்பு வாதங்களின் இறுதி விசாரணை நேற்று நடந்தது. அதில், பாஜ மாவட்ட பொதுச்செயலாளர் கருணாகரன், நாராயணனுக்கு பணம் இல்லாமல் காசோலை கொடுத்து மோசடி செய்தது உறுதியானது. அதைதொடர்ந்து நீதிமனறம், பாஜ மாவட்ட பொதுச் செயலாளர் கருணாகரனுக்கு, காசோலை மோசடி வழக்கில் 6 மாத சிறை தண்டனை வழங்கி அதிரடி தீர்ப்பு வழங்கியது. இதைதொடர்ந்து நீதிமன்றத்தில் உடன டியாக ேமல்முறையீடு மனு செய்து அவர் பிணையில் விடப்பட்டார்.

The post காசோலை மோசடி வழக்கில் பாஜ மாவட்ட பொதுச்செயலாளர் கருணாகரனுக்கு 6 மாதம் சிறை: திருவள்ளூர் நீதிமன்றம் உத்தரவு appeared first on Dinakaran.

Tags : Thiruvallur ,BJP ,district general secretary ,Karunakaran ,Chennai ,Tiruvallur ,General Secretary ,BJP district ,Dinakaran ,
× RELATED தண்ணீர் தொட்டியில் தவறி விழுந்து குழந்தை பலி