- Watts
- கிருஷ்ணகிரி
- கிருஷ்ணகிரி மாவட்டம் போச்சம்பள்ளி
- சிப்காட் வளாகம்
- ஒலிவட்டி
- காலணி நிறுவனத்திற்கான வாட்ஸ்
கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி மாவட்டம் போச்சம்பள்ளி அடுத்த ஓலைப்பட்டியில் இயங்கி வரும் சிப்காட் வளாகத்தில் தனியார் காலனி தயாரிக்கும் தொழிற்சாலை இயங்கி வருகிறது இந்த தொழிற்சாலையில் கடந்த ஓராண்டுக்கு முன்பு ஆட்கள் தேர்வு செய்யும் பணி நிறுத்தி வைக்கப்பட்ட நிலையில் இன்று புதிதாக ஆள்சேர்ப்பு நடைபெறும் என வாட்சப் மற்றும் பேஸ்புக் போன்ற சமூக வலைதளங்களில் போலியான தகவல் பரவியது இந்த தகவலின் பெயரில் இன்று சிப்காட் வளாகத்தில் உள்ள தனியார் ஷூ கம்பெனியின் முன்பு சுமார் 2 ஆயிரத்திற்கும் மேற்பட்ட படித்த இளைஞர் மற்றும் பெண்கள் குவிந்தனர்.
இதில் ஆட் தேர்வு செய்யப்படவில்லை என்று தெரிந்ததும் அதிர்ச்சி அடைந்த இளைஞர்கள் தாங்கள் கொண்டு வந்த ரெஸிமை அங்கிருந்த ஊழியர்களும் கொடுத்துவிட்டு ஏமாற்றத்துடன் திரும்பிச் சென்றனர். இது குறித்து கம்பெனி நிர்வாகத்திடம் கேட்ட பொழுது இந்த ஆட் தேர்வு சுமார் ஓராண்டிற்கு முன்பு விண்ணப்பங்கள் கொடுக்கப்பட்டுள்ளதில் அந்த மனுக்களுக்கு மட்டும் தேர்வு செய்யப்பட்டு தகுதிவாய்ந்த விண்ணப்ப காரர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்ட நிலையில் மட்டும் தற்பொழுது அந்த நபர்களுக்கு மட்டும் பணி வழங்கப்பட வாய்ப்புள்ளது. மேலும் ஆள் தேர்வு குறித்த அறிவிப்பு கம்பெனி நிர்வாகத்தின் மூலம் வெளியிடப்படும் என தெரிவித்தனர்.
The post ஷூ கம்பெனிக்கு ஆட்கள் எடுப்பதாக வாட்ஸ் அப்பில் போலியான தகவல்: விண்ணப்பிக்க குவிந்த 2 ஆயிரத்திற்கும் மேற்பட்ட இளைஞர்கள் appeared first on Dinakaran.