×

தமிழ்நாட்டில் 7 முக்கிய ரயில்களில் 2-ம் வகுப்பு பெட்டிகள் குறைப்பு: பயணிகள் அதிர்ச்சி

சென்னை: தமிழ்நாட்டில் இருந்து செல்லும் 7 முக்கிய ரயில்களில் 2-ம் வகுப்பு பெட்டிகள் குறைக்கப்பட்டு ஏசி பெட்டிகள் அதிகரிக்கப்பட்டுள்ளது. மன்னார்குடியில் இருந்து ராஜஸ்தானின் பகத் கி கோதி செல்லும் விரைவு ரயிலில் மூன்று 2-ம் வகுப்பு பெட்டிகள், ஒரு முன்பதிவில்லா பெட்டி குறைக்கப்பட்டுள்ளது. மன்னார்குடி – பகத் கி கோதி ரயிலில் குறைக்கப்பட்ட 2-ம் வகுப்பு பெட்டிகளுக்கு பதில் 4 ஏ.சி. பெட்டிகள் அதிகரிக்கப்பட்டுள்ளது. இனி மன்னார்குடி – பகத் டா கி கோதி ரயிலில் 11 ஏ.சி. பெட்டிகள், ஏழு 2-ம் வகுப்பு படுக்கை வசதி பெட்டிகள் இருக்கும். ரயில் பெட்டிகளில் செய்யப்பட்டுள்ள புதிய மாற்றங்கள் இம்மாத இறுதி மற்றும் ஆகஸ்ட் தொடக்கத்தில் அமலுக்கு வரும்.

The post தமிழ்நாட்டில் 7 முக்கிய ரயில்களில் 2-ம் வகுப்பு பெட்டிகள் குறைப்பு: பயணிகள் அதிர்ச்சி appeared first on Dinakaran.

Tags : Tamil Nadu ,Chennai ,Mannarkudi ,
× RELATED கல்வி தொடர்பான திரைப்படங்களை பள்ளி,...