×

வைரலோ வைரல்

டிரெண்டான ரூ.2000!

நாடு முழுவதும் இனிமேல் 2000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என்று ரிசர்வ் வங்கி அறிவித்து உள்ளது. மே 23ம் தேதி முதல் செப்டம்பர் மாதம் 30ம் தேதி வரை தினமும் ரூ.20 ஆயிரம் வரை வங்கியில் சென்று மாற்றிக்கொள்ள அனுமதி அளித்து உள்ளது. பிரதமர் மோடி தலைமையில் பா.ஜ ஆட்சி அமைந்த பிறகு கறுப்பு பணத்தை ஒழிப்பதாக கூறி கடந்த 2016ம் ஆண்டு நவம்பர் 8ம் தேதி அப்போது புழக்கத்தில் இருந்த ரூ.500 மற்றும் ரூ.1000 நோட்டுகளை செல்லாது என்று அறிவித்தார். அதற்கு பதிலாக புதிதாக ரூ.500 மற்றும் ரூ.2000 நோட்டுகள் அறிமுகப்படுத்தப்பட்டன.
பழைய ரூபாய் நோட்டுகளை மாற்ற முடியாமல் பொதுமக்கள் பெரும் சிரமத்துக்கு ஆளானார்கள். இப்போது முன்கூட்டியே இந்த அறிவிப்புக் கொடுக்கப்பட்டுள்ள நிலையில் எங்கும் எதிலும் இது குறித்த பேச்சுகளும், போஸ்ட்களும் என இணையம் நிரம்பி வழிகிறது. இதில் நெட்டிசன்கள் பலரும் ‘2000 ரூபாய் நோட்டா, அது எங்க இங்கே இருக்கு’, ‘என் பேங்க் அக்கவுன்ட்டிலயே அம்புட்டுப் பணம் இருக்காது’ போன்ற மீம்கள், ட்ரோல்கள் என அட்ராசிட்டி செய்து வருகிறார்கள்.

Fan’ஐ 12ம் நம்பரில் வை?

தமிழகத்தின் பல பகுதிகளிலும் மழை பெய்துகொண்டிருக்க, சென்னை உள்ளிட்ட பகுதிகளில் கடந்த இரண்டு வாரங்களாக வெயில் சுட்டெரிக்கிறது. இதில் அனல் காற்றும் சேர்ந்துகொள்ள கேட்கவா வேண்டும். சுட்டெரிக்கும் வெயிலால் காலை 11 மணி முதல் மதியம் 3 மணி வரையிலும் பொதுமக்கள் வெளியில் செல்ல வேண்டாம் என வானிலை ஆய்வு மையமும் கூட அறிவுறுத்தியது. இந்நிலையில் நெட்டிசன்கள் வெயில் கொடுமை மீம்களை உருவாக்கி இணையம் முழுக்க வைரலாக்கிக் கொண்டிருந்தனர். குறிப்பாக ‘மாலா! Fan’ஐ 12ம் நம்பரில் வை’, ‘தந்தூரி சிக்கனிடம்’ ‘நீ மசாலாவோட உள்ள வேகுற, நான் மசாலா இல்லாம வெளியே வேகுறேன்’ போன்ற காமெடி வசனங்களால் இணையத்தை நிரப்பி வருகிறார்கள். எங்கும் எதிலும் வெயிலும் வெயில் நிமித்தமுமாக ஏராளமான புலம்பல்களும், மீம்களும் என பார்க்க முடிகிறது.

The post வைரலோ வைரல் appeared first on Dinakaran.

Tags : Reserve Bank ,Dinakaran ,
× RELATED இதுவரை இல்லாத வகையில் ஒன்றிய அரசுக்கு...