×

அதிகாரிகள் பேச்சு வார்த்தை தோல்வி: வனத்திற்குள் தொடரும் விவசாயிகள் போராட்டம்

கூடலூர்: பேச்சு வார்த்தை தோல்வி அடைந்ததை தொடர்ந்து வனப்பகுதியில் விவசாயிகள் போராட்டத்தை தொடர்ந்தனர். தேனி மாவட்ட தமிழக எல்லை, கம்பம் மேற்கு வனச்சரகத்திற்கு உட்பட்ட தமிழக வனப்பகுதியான ஆசாரிபள்ளம் பகுதியில் கூடலூர் பகுதியை சேர்ந்த சிலர் தலைமுறை தலைமுறையாக விவசாயம் செய்து வந்துள்ளனர். கடந்த 1993ல் வனப்பகுதியில் இருந்த ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டபோது, இங்கு விவசாயம் செய்த ஏராளமான விவசாயிகள் வெளியேற்றப்பட்டனர். இதில் சிலர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர்.

இதில் 18 குடும்பங்களுக்கு சாதகமாக உத்தரவு வந்துள்ளதாகக் கூறி, தங்கள் நிலத்தை ஒப்படைக்கக் கோரி பெண்கள் உட்பட சுமார் 20 பேர் வனப்பகுதியில் நேற்று முன்தினம் டென்ட் அமைத்து குடியேறினர். இதனையடுத்து வனத்துறையினர், அவர்களிடம் நடத்திய பேச்சு வார்த்தை தோல்வியடைந்தது. போராட்டம் நடத்தும் விவசாயிகளின் வழக்கறிஞர்களுடன், வனத்துறை உயரதிகாரிகள் நேற்று தேனியில் பேச்சு வார்த்தை நடத்தினர். இந்த பேச்சிலும் முடிவு எட்டப்படாததால், மழையிலும் விவசாயிகள் வனப்பகுதிக்குள் போராட்டத்தை தொடர்கின்றனர்.

The post அதிகாரிகள் பேச்சு வார்த்தை தோல்வி: வனத்திற்குள் தொடரும் விவசாயிகள் போராட்டம் appeared first on Dinakaran.

Tags : Kudalur ,Theni district ,Tamil Nadu border ,Kampam ,Dinakaran ,
× RELATED தேனி மாவட்ட காங்கிரஸ் நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம்