×

ஒட்டு மொத்த தேசத்திற்கும் ஆன்மீக வழிகாட்டியாக விளங்கிய சுவாமி விவேகானந்தர் நினைவைப் போற்றுவோம் :அண்ணாமலை

சென்னை : ஒட்டு மொத்த தேசத்திற்கும் ஆன்மீக வழிகாட்டியாக விளங்கிய சுவாமி விவேகானந்தர் நினைவைப் போற்றுவோம் என்று அண்ணாமலை தெரிவித்துள்ளார்.இதுதொடர்பாக தமிழக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தனது ட்விட்டர் பக்கத்தில், “நமது நாட்டின் கலாச்சாரத்தையும், பெருமைகளையும், தத்துவங்களையும், உயரிய ஞானக் கோட்பாடுகளையும் உலக அரங்கில் கொண்டு சென்ற வீரத் துறவி சுவாமி விவேகானந்தர் அவர்களது நினைவுதினம் இன்று.

இந்து சமயக் கொள்கைகளில் அதீத ஈடுபாடு உடையவராகவும், ஆழ்ந்த சிந்தனைவாதியாகவும், பன்மொழிப் புலமையும், சேவை மனப்பான்மை மிக்கவராகவும் வாழ்ந்த சுவாமி விவேகானந்தர், தன்னுடைய ஆழ்ந்த ஆன்மீகம் மற்றும் தேசபக்தி உரைகளால் இளைஞர்களை ஊக்கப்படுத்தி, அவர்களை சிறந்த சிந்தனையாளர்களாகவும், தூய்மையான தலைவர்களாகவும் உருவாக்கியவர்.பல தலைமுறைகளுக்கும் ஊக்கமளிக்கும் வகையில் வாழ்ந்து, ஒட்டு மொத்த தேசத்திற்கும் ஆன்மீக வழிகாட்டியாக விளங்கிய சுவாமி விவேகானந்தர் நினைவைப் போற்றுவோம்.” என்று குறிப்பிட்டுள்ளார்.

The post ஒட்டு மொத்த தேசத்திற்கும் ஆன்மீக வழிகாட்டியாக விளங்கிய சுவாமி விவேகானந்தர் நினைவைப் போற்றுவோம் :அண்ணாமலை appeared first on Dinakaran.

Tags : Sawami Vivekanandar ,Anamalai ,Chennai ,Svami Vivekanandar ,
× RELATED வழக்கறிஞர்களிடையே மோதல்: வழக்கை விசாரிக்க ஐகோர்ட் ஒப்புதல்