×

மங்குழி பாலப்பணிகள் இறுதி கட்டத்தை எட்டியது

கூடலூர்: கூடலூர் நகராட்சிக்கு உட்பட்ட மங்குழி பகுதியில் புதிதாக சீரமைக்கப்பட்டு வரும் பாலத்தின் பணிகள் நிறைவடையும் நிலையை எட்டி உள்ளது. கடந்த வருடம் மழைக்காலத்தில்மழை வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்ட இந்த பாலம் தற்போது வெள்ளநீர் வேகமாக செல்வதற்கு வசதியாக உயரமாகவும் அகலமாகவும் கட்டப்பட்டுள்ளது. இப்பகுதி வழியாக ஓடும் பாண்டி ஆற்றின் கிளை ஆற்றின் வளைவான பகுதியில் இந்த பாலம் அமைந்துள்ளது. ஆறு வளைந்து செல்வதால் மண்ணரிப்பு ஏற்பட்டு பாலத்தின் தூண்கள் இடிந்ததில் பழைய பாலம் ஏற்கனவே சேதம் அடைந்தது.

சிறியதாகவும் தண்ணீர் செல்லும் இடைவெளி குறுகியதாகவும் இருந்த நிலையில் தற்போது 1.13 கோடி செலவில் 5 மீட்டர் அகலம் 30 மீட்டர் நீளத்தில் மழை வெள்ளநீர் வேகமாக செல்வதற்கு வசதியாக பாலம் அமைக்கப்பட்டுள்ளது. பாலத்தின் இருபுறமும் இணைப்பு சாலை பணிகள் முடிவடைந்ததும் பாலம் பயன்பாட்டிற்கு திறக்கப்படலாம் என கூறப்படுகிறது.

The post மங்குழி பாலப்பணிகள் இறுதி கட்டத்தை எட்டியது appeared first on Dinakaran.

Tags : Manguzhi ,Kudalur ,Dinakaran ,
× RELATED கூடலூர் அருகே கிணற்றில் விழுந்த குட்டியானை தாய் யானையுடன் விடப்பட்டது..!!