- அமெரிக்க கடற்படை
- சென்னை
- வேல்முருகன்
- தமிழ்நாடு வாழ்வுரிமைக் கட்சி
- பண்ருட்டி டி.வேல்முருகன்
- மத்திய அரசு
- தமிழ்நாடு: உச்ச நீதிமன்றம்
சென்னை: தமிழ்நாட்டை ராணுவ மயமாக்கும் வகையில் மத்திய அரசு ஒப்பந்தம் போட்டுள்ளதாக தமிழக வாழ்வுரிமைக் கட்சித் தலைவர் பண்ருட்டி தி.வேல்முருகன் எச்சரிக்கை விடுத்துள்ளார்.இதுகுறித்து தமிழக வாழ்வுரிமை கட்சியின் தலைவரும், எம்எல்ஏவுமான வேல்முருகன் வெளியிட்டுள்ள அறிக்கையில், “சென்னை காட்டுப்பள்ளியில் உள்ள லார்சன் அண்ட் டூப்ரோ கப்பல் கட்டும் தளத்துடன் கப்பல் பழுதுபார்ப்பு ஒப்பந்தத்தை அமெரிக்க கடற்படை முடித்திருப்பது அதிர்ச்சி அளிக்கிறது.சமீபத்தில் அமெரிக்கா சென்று வந்த இந்திய ஒன்றிய அரசின் பிரதமர் மோடி, அந்நாட்டுடன் பல்வேறு ஒப்பந்தங்களில் கையெழுத்திட்டுள்ளார்.
(New Sustainment and Ship Repair: The United States Navy has concluded a Master Ship Repair Agreement (MSRA) with Larsen and Toubro Shipyard in Kattupalli (Chennai) and is finalizing agreements with Mazagon Dock Limited (Mumbai) and Goa Shipyard (Goa). These agreements will allow mid-voyage U.S. Navy ships to undergo service and repair at Indian shipyards, facilitating cost-effective and time-saving sustainment activites for U.S. military operations across multiple theaters.)
அதாவது, சென்னை காட்டுப்பள்ளியில் உள்ள லார்சன் அண்ட் டூப்ரோ(L&T) கப்பல் கட்டும் தளத்துடன் கப்பல் பழுதுபார்ப்பு ஒப்பந்தத்தை அமெரிக்க கடற்படை (Master Ship Repair Agreement (MSRA)) முடித்துள்ளது. மேலும், மும்பை மசாகான் டாக் லிமிடெட் மற்றும் கோவா கப்பல் கட்டும் தளம் ஆகியவற்றுடன் ஒப்பந்தங்களை இறுதி செய்து வருகிறது.
இந்த ஒப்பந்தங்கள் இந்திய கப்பல் கட்டும் தளங்களில் சேவை மற்றும் பழுதுபார்ப்புக்கு இடைப்பட்ட அமெரிக்க கடற்படை கப்பல்களை அனுமதிக்கும், இது பல அரங்குகளிலும் அமெரிக்கா மேற்கொள்ளும் இராணுவ நடவடிக்கைகளுக்கான செலவு குறைந்த மற்றும் நேரத்தை மிச்சப்படுத்தும் நிலையான செயல்பாடுகளை எளிதாக்குகிறது என குறிப்பிடப்பட்டுள்ளது.
காட்டுப்பள்ளியில் உள்ள துறைமுகத்தை லார்சன் அண்ட் டூப்ரோ லிமிடெட், மரைன் இன்ஃப்ராஸ்ட்ரக்சர் டெவலப்பர் பிரைவேட் லிமிடெட், எல் அண்ட் டி ஷிப் பில்டிங் லிமிடெட் ஆகிய நிறுவனங்களுடன் மேற்கொண்ட ஒப்பந்தம் வாயிலாக அதானியின் துறைமுக நிறுவனம் 2018ஆம் ஆண்டே விலைக்கு வாங்கி இருந்தது. இத்துறைமுகத்தை 53 ஆயிரம் கோடி செலவில் ஆண்டுக்கு மொத்தமாக ஆண்டிற்கு 320 மில்லியன் டன் சரக்குகளை கையாளும் அளவிற்கு 6110 ஏக்கர் பரப்பளவில் விரிவாக்கம் செய்ய அதானி துறைமுக நிறுவனம் திட்டமிட்டிருந்தது.சுற்றுச்சூழல் மாசுபாடு, கடலரிப்பு என பல்வேறு பாதிப்புகள் உருவாகும் என்பதை கருத்தில் கொண்டு, அதானி துறைமுகத்துக்கு, மண்ணின் மக்களான மீனவர்கள் தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.
இந்த நிலையில், லார்சன் அண்ட் டூப்ரோ நிறுவனத்துடன் அமெரிக்கா கப்பல்படை மேற்கூறிய ஒப்பந்தத்தை மேற்கொண்டுள்ளது அதிர்ச்சி அளிக்கிறது. இலங்கையில் சீனா கப்பல்தளம் அமைத்துள்ள நிலையில், சென்னையில் அமெரிக்க கப்பல்தளம் என்பது பதற்றத்தை அதிகப்படுத்தும்.ரஷ்யா, சீனா உள்ளிட்ட நாடுகளுடனான அமெரிக்க அரசின் நிலைப்பாடுகள் எதிராக உள்ள நிலையில், போர்ச்சூழல் உருவானால் அமெரிக்க ராணுவம் காட்டுப்பள்ளியை தனக்கான தளமாக பயன்படுத்தும் அபாயம் உள்ளது. இதனால், பாதிக்கப்பட போவது, தமிழ்நாடும், தமிழ்நாட்டு மக்களும் தான். தமிழ்நாட்டில் ஒரு தனியார் நிறுவனத்துடன், அமெரிக்க ராணுவம் ஒரு ஒப்பந்தை மேற்கொள்வதையும், அந்த ஒப்பந்தமானது அமெரிக்காவின் ராணுவ நடவடிக்கைகளுக்கு உதவிகரமாக இருக்கும் என்பதையும் வெள்ளை மாளிகை கூறியுள்ளது. இது தமிழ்நாட்டின் ஆபத்தான போக்கிற்கு வழிவகுக்கும்.
முக்கியமாக, லார்சன் அண்ட் டூப்ரோ நிறுவனத்துடன் போடப்பட்ட ஒப்பந்தம் மற்றும் அதானியின் துறைமுக விரிவாக்கத் திட்டம் என்பது தமிழ்நாட்டை பேரழிவுக்கு இட்டுச்செல்லும் ஒப்பந்தமாகும். எனவே, லார்சன் அண்ட் டூப்ரோ நிறுவனத்துடன் போடப்பட்ட ஒப்பந்தம், அதானியின் துறைமுக விரிவாக்கத் திட்டங்களை தடுத்து நிறுத்த தமிழ்நாடு அரசு முன் வர வேண்டும். சென்னை, கோவை, ஒசூர், சேலம், திருச்சி ஆகிய இடங்களில் ராணுவத் தளவாட உற்பத்திக் கேந்திரங்கள் அமைக்கும் திட்டங்களையும், தமிழ்நாட்டை ராணுவமயமாக்கும் நடவடிக்கைகளையும் கைவிட ஒன்றிய அரசுக்கு, தமிழ்நாடு அரசு போதிய அழுத்தம் கொடுக்க வேண்டும் என தமிழக வாழ்வுரிமைக் கட்சி கேட்டுக்கொள்கிறது.” என்று குறிப்பிட்டுள்ளார்.
The post சென்னையில் அமெரிக்க கப்பற்படை.. தமிழ்நாட்டை ராணுவமயமாக்க ஒன்றிய அரசு ஒப்பந்தம்: வேல்முருகன் தாக்கு appeared first on Dinakaran.

