×

உச்சநீதிமன்ற தீர்ப்பின்படி கர்நாடக அரசு ஜூன் மாதத்துக்கான தண்ணீரை திறந்து விடவில்லை: அமைச்சர் துரைமுருகன் பேட்டி

சென்னை: மேகதாது விவகாரம் தொடர்பாக நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் டெல்லி செல்கிறார். இந்நிலையில் அமைச்சர் துரைமுருகன் சென்னையில் செய்தியாளர்களை சந்தித்து பேட்டியளித்தார். அப்போது பேசியதாவது; ஜூன் மாதத்துக்கான தண்ணீரை கர்நாடக அரசு திறக்கவில்லை. தமிழ்நாட்டிற்கு உச்சநீதிமன்ற உத்தரவுப்படி ஜூன் மாதம் 9.19 டி.எம்.சி. தண்ணீர் தமிழ்நாட்டுக்கு திறக்கப்பட வேண்டும். ஆனால், 2.83 டி.எம்.சி தண்ணீர் மட்டுமே வழங்கப்பட்டுள்ளது.

தமிழகத்திற்கு ஜூன் மாதத்திற்கான 6.357 டிஎம்சி தண்ணீரை இன்னும் கர்நாடகா தரவேண்டியுள்ளது. காவிரியிலிருந்து ஜூலையில் 31.24 டிஎம்சியும், ஆகஸ்டில் 45.95 டிஎம்சியும் கர்நாடகா தர வேண்டும். ஜூன், ஜூலை மாதங்களுக்கான தண்ணீரை பெற்றுத்தந்தால் மட்டுமே குறுவை சாகுபடி செய்யமுடியும் என்று விவசாயிகள் தெரிவித்துள்ளனர். மேட்டூர் அணைக்கு நீர்வரத்து வினாடிக்கு 160 கனஅடியாக இருப்பதால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர். குறுவை சாகுபடிக்கு தண்ணீர் கிடைக்குமா என டெல்டா விவசாயிகள் தவிக்கின்றனர்.

தமிழ்நாடு அரசுடன் கர்நாடகம் பேசினால், காவிரியில் ஏன் தடுப்பணை கூடாது என்பதை காரணத்தோடு விளக்குவோம். மேகதாது அணை குறித்து காவிரி மேலாண்மை ஆணையம், ஜல் சக்தி அமைச்சகத்துடன் பேசக்கூடாது என்று நீதிமன்ற ஆணையிட்டுள்ளது. இவ்வாறு தெரிவித்தார். மேலும் காவிரி, மேகதாது விவகாரம் தொடர்பாக ஒன்றிய அமைச்சரிடம் முறையிட நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் டெல்லி செல்கிறார். ஒன்றிய ஜல் சக்தித்துறை அமைச்சர் கஜேந்திர சிங்கை நேரில் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்த உள்ளார். காவிரி மேலாண்மை ஆணைய அதிகாரிகளையும் சந்தித்து தமிழ்நாடு அரசின் நிலைப்பாட்டை தெரிவிக்க உள்ளார்.

The post உச்சநீதிமன்ற தீர்ப்பின்படி கர்நாடக அரசு ஜூன் மாதத்துக்கான தண்ணீரை திறந்து விடவில்லை: அமைச்சர் துரைமுருகன் பேட்டி appeared first on Dinakaran.

Tags : Supreme Court ,Karnataka government ,Minister ,Thuraymurugan ,Chennai ,Durimurugan ,Delhi ,
× RELATED முத்திரைத்தாள் வரி வசூலிப்பது என்பது...