×

பெண்களுக்கான அழகு நிலைய உரிமம் ரத்து: தாலிபான் அரசுக்கு மகளிர் அமைப்புகள் கடும் கண்டனம்

காபூல்: ஆப்கானிஸ்தானில் பெண்கள் அழகு நிலையங்களுக்கு தாலிபான் அரசு தடை விதித்து இருப்பது கடும் விமர்சனங்களை ஏற்படுத்தி இருக்கிறது. தாலிபான் அரசு ஆப்கானிஸ்தானை தன்வசம் படுத்தியது முதல் பெண்களுக்கு எதிராக பல்வேறு தடைகளை விதித்தது. முதலில் பெண்கள் பள்ளி, கல்லூரிகளுக்கு செல்ல தடை விதித்தது. அதன்பின் பூங்கா, சினிமா மற்றும் பொழுதுபோக்கு மையங்களில் பெண்கள் வேலை செய்யவும், பொது இடங்களுக்கு ஆண்கள் துணையின்றி செல்லவும் தடை விதித்தது.

இந்நிலையில், ஆப்கானிஸ்தானில் பெண்களின் உரிமைகள் மீதான அடுத்தகட்ட தாக்குதலாக தலைநகர் காபூல் மற்றும் பிற மாகாணங்களில் பெண்களுக்கான அழகு நிலையங்கள் செயல்படுவதற்கு தடை விதித்து தாலிபான் அரசு வாய்மொழி அணையிட்டுள்ளது. தாலிபான் அரசின் நல்ஒழுக்க அமைச்சகக்கத்தின் தொடர்பாளர் பெண்கள் அழகு நிலையங்களில் உரிமத்தை ரத்து செய்ய வேண்டும் என உத்தரவு பிறப்பித்துள்ளார். இதனால் ஏராளமான பெண்கள் வேலை இழக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது. ஆப்கானில் பெண்களுக்கு கிடைக்கும் சுதந்திரத்தை தாலிபான் அரசு புதிய உத்தரவு மேலும் மோசமடைய செய்துள்ளதாக மகளிர் அமிக்குகள் குற்றச்சாட்டியுள்ளம்.

The post பெண்களுக்கான அழகு நிலைய உரிமம் ரத்து: தாலிபான் அரசுக்கு மகளிர் அமைப்புகள் கடும் கண்டனம் appeared first on Dinakaran.

Tags : Taliban government ,Kabul ,Afghanistan ,Taliban ,Dinakaran ,
× RELATED உ.பி பாஜக அரசை தலிபான் அரசு என்று கூறிய...