×

கர்நாடகாவில் இருந்து திறக்கப்படும் காவிரி நீரில் 28 வகையான நச்சுப்பொருட்கள் கலப்பதாக ஆய்வில் தகவல்..அழிவின் விளிம்பில் மீன் இனங்கள்..!!

சேலம்: கர்நாடகாவில் இருந்து திறக்கப்படும் காவிரி நீரில் 28 வகையான நச்சுப்பொருட்கள் கலந்திருப்பது ஐஐடி ஆய்வில் தெரியவந்துள்ளது. காவிரி நீரில் காசினோசென், நோய் எதிர்ப்பு சக்தியை அழிக்கும் டையாக்சின் போன்ற 28 வகையான நச்சுப்பொருட்கள் கலந்திருப்பதாக ஐஐடி ஆய்வில் உறுதியாகியுள்ளது. பெங்களூருவில் உள்ள ஆலைகளில் இருந்து கோடிக்கணக்கான லிட்டர் கழிவுநீர் காவிரியில் கலப்பதாகவும் இதனால் மேட்டூர் நீர்த்தேக்கம் மாசடைந்திருப்பதாக அப்பகுதி விவசாயிகள் குற்றம்சாட்டியுள்ளனர். இந்த கழிவு நீரால் மேட்டூர் நீர் பச்சைநிறத்தில் காட்சியளிப்பதாக அப்பகுதியினர் புகார் கூறுகின்றனர். இதன் காரணமாக மேட்டூர் நீர்த்தேக்கத்தில் அழிவின் விளிம்பில் மீன் இனங்கள் இருப்பதாகவும், ஒன்றிய சுற்றுச்சூழல் அமைச்சகம் உடனடியாக கர்நாடகம் சென்று எந்த இடத்தில் கழிவுநீர் கலக்கிறது என்பதை ஆய்வு செய்து கழிவு தண்ணீரை தடுக்க வேண்டும்.  அவ்வாறு கழிவுநீர் கலப்பதை தடுத்து சுத்தமான தண்ணீரை மேட்டூருக்கு அனுப்பாவிட்டால் மிகப்பெரிய போராட்டத்தை நடத்துவோம் என்றும் அவர்கள் குறிப்பிட்டுள்ளனர். மேலும், தண்ணீரின் அவசியத்தை கருத்தில் கொண்டு மாசு கட்டுப்பாட்டு வாரியம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் அப்பகுதி விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். …

The post கர்நாடகாவில் இருந்து திறக்கப்படும் காவிரி நீரில் 28 வகையான நச்சுப்பொருட்கள் கலப்பதாக ஆய்வில் தகவல்..அழிவின் விளிம்பில் மீன் இனங்கள்..!! appeared first on Dinakaran.

Tags : Karnataka ,Salem ,IID ,Kaviri ,
× RELATED சிக்னல் கோளாறால் சென்னை ரயில் நடுவழியில் நிறுத்தம்: பயணிகள் அவதி