×

தேவதானபட்டியில் விஷம் குடித்து கூலித்தொழிலாளி தற்கொலை: போலீசார் விசாரணை

தேவதானப்பட்டி, ஜூலை 4: தேவதானப்பட்டியில் விஷம் குடித்து கூலித்தொழிலாளி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர். தேவதானப்பட்டி ஆர்எஸ் புரத்தைச் சேர்ந்தவர் தங்கப்பாண்டி(50). இவர் அடிக்கடி மது குடித்துவிட்டு வீட்டில் தகராறில் ஈடுபட்டுவந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில் நேற்று முன்தினம் தங்கப்பாண்டி மதுவில் விஷமருந்தை கலந்து குடித்து மயங்கிய நிலையில் கிடந்துள்ளார்.

இதனையடுத்து தங்கப்பாண்டியை அரசு மருத்துவ மனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள் தங்கப்பாண்டி இறந்துவிட்டதாக தெரிவித்தனர். இது குறித்து இறந்த தங்கப்பாண்டியின் தாயார் பொன்னுத்தாய் தேவதானப்பட்டி போலீசில் புகார் தனது மகன் சந்தேகம் இருப்பதாக புகார் அளித்துள்ளார். போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

The post தேவதானபட்டியில் விஷம் குடித்து கூலித்தொழிலாளி தற்கொலை: போலீசார் விசாரணை appeared first on Dinakaran.

Tags : Devdanapatti ,Devadanapatti ,
× RELATED தேவதானப்பட்டி பகுதியில் தென்னை...