×

ஒட்டன்சத்திரம் நகராட்சி குடிநீர் திட்டத்திற்கு ரூ.125 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது அமைச்சர் அர.சக்கரபாணி பேச்சு

ஒட்டன்சத்திரம், ஜூலை 4: ஒட்டன்சத்திரம் நகராட்சிக்குட்பட்ட சொசைட்டி காலனி, காந்தி நகர், திடீர் நகர், வினோபா நகர், சாஸ்தா நகர், நல்லாக்கவுண்டன் நகர், தும்மிச்சம்பட்டி புதூர், கஸ்தூரி நகர், ஏ.பி.பி. நகர், சத்தியா நகர் உள்ளிட்ட பகுதிகளில் சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு திட்டம் மற்றும் நமக்கு நாமே திட்டத்தில் கட்டப்பட்ட புதிய நியாய விலை கடைகள் திறப்பு விழா நடைபெற்றது. நகர செயலாளர் வெள்ளைச்சாமி தலைமை வகித்தார். சிறப்பு விருந்தினராக உணவு மற்றும் உணவுப்பொருள் வழங்கல் துறை அமைச்சர் அர.சக்கரபாணி கலந்து கொண்டு புதிய நியாய விலை கடை கட்டிடங்களை திறந்து வைத்து புதிய குடும்ப அட்டைகளை வழங்கி பேசியதாவது: தமிழ்நாடு முதலமைச்சர் எல்லோருக்கும் எல்லாம் கிடைக்க வேண்டும் என்ற சிந்தனையில் மக்களின் நலன் காக்கும் திட்டங்களை செயல்படுத்தி வருகிறார். ஆட்சி அமைந்த 2 ஆண்டுகளில் 15 லட்சம் குடும்ப அட்டைகள் வழங்கப்பட்டுள்ளது. கண் கருவிழி மூலம் ரேஷன் பொருட்களை பெறுவதற்கும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

விரைவில் பாக்கெட்டுகளில் ரேஷன் அரிசி வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. ரேஷன் பொருட்கள் பொதுமக்களுக்கு தரமானதாக கிடைக்க மாவட்ட கலெக்டர் தலைமையில் அதிகாரிகள் குழு அமைத்து ஆய்வு செய்த பின்பே மக்களுக்கு வினியோகம் செய்யப்படுகிறது. தமிழகத்தில் 747 புதிய அரிசி அரவை ஆலைகள் அமைக்கப்பட்டுள்ளது. பரப்பலாறு அணை, தலையூத்து அருவி சுற்றுலா தலமாக அறிவிக்கப்பட்டு அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. ஒட்டன்சத்திரம் நகராட்சி பகுதிகளில் குடிநீர் திட்டங்களுக்கு என ரூ.125 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு, புதிய பைப் லைன் அமைக்கப்பட்டு 14 மாதத்தில் பணிகள் முடிவடைந்தவுடன் நபர் ஒன்றுக்கு 135 லிட்டர் குடிநீர் வழங்கப்படும்.

நகராட்சி பகுதியில் சாக்கடைகள் கட்டுவதற்கு ரூ.32 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. விரைவில் இடையகோட்டை சுற்றுலா தலமாக அறிவிக்கப்படவுள்ளது. நகராட்சி பகுதியில் 5 பள்ளிகளில் காலை சிற்றுண்டி திட்டம் விரைவில் துவங்கப்படவுள்ளது. பொதுமக்களின் எண்ணங்கள் நிறைவேற தொடர்ந்து தமிழ்நாடு அரசுக்கு ஆதரவு தர வேண்டும். இவ்வாறு பேசினார். இந்நிகழ்வில் பாராளுமன்ற உறுப்பினர் வேலுச்சாமி, மாவட்ட துணை செயலாளர் ராஜாமணி, மாவட்ட அவை தலைவர் மோகன், நகர் மன்ற தலைவர் திருமலைசாமி, செயற்குழு உறுப்பினர் கண்ணன், பொதுக்குழு உறுப்பினர் பாலு, மாவட்ட இளைஞரணி துணை அமைப்பாளர் பாண்டியராஜன், நகர துணை செயலாளர் கிருஷ்ணமூர்த்தி, மாவட்ட வழங்கல் அலுவலர் சிவக்குமார், வட்ட வழங்கல் அலுவலர் பிரசன்னா, ஆணையாளர் சக்திவேல், மேலாளர் உமாகாந்தி, கணக்கர் சரவணன், துப்பரவு ஆய்வாளர் ராஜ்மோகன், இளநிலை உதவியாளர் ஈஸ்வரன், அரசு ஒப்பந்ததாரர்கள் வேலுச்சாமி, முத்துக்கண்ணன் மற்றும் நகர்மன்ற உறுப்பினர்கள், வார்டு செயலாளர்கள், தகவல் தொழில்நுட்ப அணி நிர்வாகிகள், இளைஞரணி நிர்வாகிகள், மாணவரணி நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

The post ஒட்டன்சத்திரம் நகராட்சி குடிநீர் திட்டத்திற்கு ரூ.125 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது அமைச்சர் அர.சக்கரபாணி பேச்சு appeared first on Dinakaran.

Tags : Minister ,A. Chakrapani ,Ottanchatram ,Society Colony ,Municipality ,Gandhi Nagar ,Sudhu Nagar ,Vinoba Nagar ,Shasta Nagar ,Dinakaran ,
× RELATED பழநி வனப்பகுதி எல்லைகளில் யானைகள் நடமாட்டம் அதிகரிப்பு