வேதாரண்யம், ஜூலை 4: பவுர்ணமியை முன்னிட்டு உலக நன்மை வேண்டி ஆயக்காரன்புலம் செல்லியம்மன் கோயிலில் சிறப்பு யாகம் நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். நாகப்பட்டினம் மாவட்டம் வேதாரண்யம் அடுத்த ஆயக்காரன்புலம் பகுதியில் அமைந்துள்ளது செல்லியம்மன் கோயில். இந்த கோயில் மிகவும் பழமை வாய்ந்த சிறப்புடைய கோயிலாகும்.
இந்த கோயிலில் ஆனி மாத பவுர்ணமியை முன்னிட்டு சிவாச்சாரியர் ராஜா, அருள்வாக்கு சித்தர் கலிதிர்த்தான் மற்றும் சிவச்சாரிகள் அம்மனுக்கு புனித நீர் அடங்கிய கலசங்கள் வைத்து சாமுண்டி யாகம் வளர்த்து சிறப்பு பூஜை நடைபெற்றது. பின்பு புனித நீர் அடங்கிய குடங்கள் எடுத்துச்செல்லப்பட்டு அம்மனுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனை நடந்தது. பின்பு வண்ண மலர்களால் அலங்கரிக்கப்பட்டு சிறப்பு தீபாரதனை நடந்தது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு செல்லியம்மனை வழிபட்டனர். விழா ஏற்பாடுகளை ஆலய அறங்காவலர் குழுவினர் செய்து இருந்தனர்.
The post உலக நன்மை வேண்டி ஆயக்காரன்புலம் செல்லியம்மன் கோயிலில் சிறப்பு யாகம் appeared first on Dinakaran.