×

அரியலூர் மாவட்டத்தில் 106 கடைகளில் ஆய்வு அரசால் தடை செய்த புகையிலை விற்ற 4 கடைகளுக்கு அபராதம்: உணவு பாதுகாப்பு துறையினர் அதிரடி

 

அரியலூர், ஜூலை 4:அரியலூர் மாவட்டம், உணவு பாதுகாப்பு துறை சார்பில் மாவட்டம் முழுவதும் 106 கடைகளில் ஆய்வு செய்யப்பட்டதில், வி.கைகாட்டி பகுதி மற்றும் அரியலூர் தற்காலிக பேருந்து நிலையம் உள்ளிட்ட பகுதிகளில் தமிழக அரசால் தடைசெய்யப்பட்ட புகையிலை பொருட்கள், விற்பனை செய்த 4 கடைகளுக்கு அபராதம் விதிக்கப்பட்டு பறிமுதல் செய்யப்பட்டது.

இதுபோன்று தொடர் நடவடிக்கைகள் மேற்கொண்டு கண்காணித்திட உணவுப் பாதுகாப்புத்துறை அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. கடைகளில் புகையிலை போன்ற போதை வஸ்துகள் விற்பது கண்டறியப்பட்டால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும். மேலும், உணவு பாதுகாப்பு தரம், தமிழக அரசால் தடைசெய்யப்பட்ட புகையிலை பொருட்கள் விற்பது குறித்து பொது மக்கள் புகார் தெரிவிக்க வாட்ஸ் அப் எண்: 9444042322 என்ற எண்ணிற்கு புகார் தெரிவிக்கலாம் என மாவட்ட கலெக்டர் ஆனி மேரி ஸ்வர்ணா, தெரிவித்துள்ளார்.

The post அரியலூர் மாவட்டத்தில் 106 கடைகளில் ஆய்வு அரசால் தடை செய்த புகையிலை விற்ற 4 கடைகளுக்கு அபராதம்: உணவு பாதுகாப்பு துறையினர் அதிரடி appeared first on Dinakaran.

Tags : Ariyalur ,Department ,district ,Food Safety Department ,Ariyalur District ,
× RELATED அரியலூர் அருகே கோர விபத்து 4 பேர் உயிரிழப்பு