×

பைக் திருடிய கேரள வாலிபர் கைது

 

அவிநாசி, ஜூலை 4: அவிநாசி அருகே பைக் திருடிய கேரள மாநில வாலிபரை போலீசார் கைது செய்தனர். அவிநாசி, தெக்கலூரில் போலீசார் ரோந்து பணியில் நேற்று ஈடுபட்டிருந்தனர். அப்போது சந்தேகத்துக்கு இடமாக பைக்குடன் நின்ற வாலிபரை பிடித்து விசாரணை நடத்தினர். அவர் கேரள மாநிலத்தைச் சேர்ந்த சுதர்சன் (26) என்பதும், அவர் வைத்திருந்தது திருட்டு பைக் என்பதும் தெரியவந்தது, இதனையடுத்து போலீசார் அவரை கைது செய்து பைக்கை பறிமுதல் செய்தனர்.

The post பைக் திருடிய கேரள வாலிபர் கைது appeared first on Dinakaran.

Tags : Kerala ,Avinasi ,
× RELATED மனைவி பிரிந்ததால் வேதனை; தற்கொலையை...