×

தனியார் மருத்துவமனையில் வழக்கமான பரிசோதனைக்காக முதல்வர் மு.க.ஸ்டாலின் அனுமதி: இன்று வீடு திரும்புகிறார்

சென்னை: முதல்வர் மு.க.ஸ்டாலின் வழக்கமான மருத்துவ சோதனைகளுக்காக மருத்துவமனையில் நேற்று அனுமதிக்கப்பட்டார். இன்று வீடு திரும்புகிறார் என மருத்துவமனை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. சென்னை ஆயிரம் விளக்கு பகுதி கிரீம்ஸ் சாலையில் உள்ள அப்போலோ மருத்துவமனையில் முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்று மாலை அனுமதிக்கப்பட்டார்.
அப்போலோ மருத்துவமனை சார்பில் வெளியிடப்பட்ட அறிக்கையில், ‘‘வழக்கமான மருத்துவ சோதனைகளுக்காக முதல்வர் மு.க.ஸ்டாலின் அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளார். மருத்துவ பரிசோதனை முடிந்து முதல்வர் இன்று டிஸ்சார்ஜ் செய்யப்படுவார்’’ என கூறப்பட்டுள்ளது.

The post தனியார் மருத்துவமனையில் வழக்கமான பரிசோதனைக்காக முதல்வர் மு.க.ஸ்டாலின் அனுமதி: இன்று வீடு திரும்புகிறார் appeared first on Dinakaran.

Tags : Principal ,BCM ,G.K. Stalin ,Chennai ,CM ,
× RELATED மாணவ, மாணவிகள் 10ம் வகுப்பு...