×

ஒடிசா ரயில் விபத்துக்கு தவறான சிக்னல் தான் காரணம்: உயர்மட்ட விசாரணையில் தகவல்

புதுடெல்லி: ஒடிசா ரயில் விபத்தில் தவறான சிக்னல் கொடுத்ததுதான் காரணம் என்பது உயர்மட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. ஒடிசா மாநிலம் பாலசோர் மாவட்டத்தில் ஜூன் 2ம் தேதி சென்னை நோக்கி வந்த கோரமண்டல் ரயில் உள்பட 3 ரயில்கள் மோதிக்கொண்டதில் 292 பேர் பலியானார்கள். இந்த ரயில் விபத்து குறித்து ரயில்வே பாதுகாப்பு ஆணையர் மற்றும் சிபிஐ தனித்தனியாக விசாரணை நடத்தினர். இதில் ரயில்வே பாதுகாப்பு ஆணையர் விசாரணை நடத்தி முடித்து தனது அறிக்கையை ரயில்வே வாரியத்திடம் சமர்ப்பித்து விட்டது. அந்த அறிக்கையில் கூறியிருப்பதாவது:

ஒடிசா பஹானகா பஜார் ரயில் நிலையத்தில் ஒரே தண்டவாளத்தில் ஒரே நேரத்தில் 2 ரயில்கள் இயக்க சிக்னல் கொடுக்கப்பட்டது. இதை உரிய முறையில் ரயில்நிலைய மேலாளர் கவனித்து இருந்தால் இந்த கோரவிபத்தை தவிர்த்து இருக்கலாம். 2022 மே 16 அன்று தென்கிழக்கு ரயில்வேயின் கார்க்பூர் பிரிவில் உள்ள பாங்க்ரனாயபாஸ் நிலையத்தில் தவறான வயரிங் மற்றும் கேபிள் பழுதினால் இதேபோன்ற சம்பவம் நடந்துள்ளது. இந்தச் சம்பவத்திற்குப் பிறகு, சரியான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டிருந்தால், ஒடிசா ரயில் விபத்து நடந்து இருக்காது. இவ்வாறு குறிப்பிடப்பட்டுள்ளது.

The post ஒடிசா ரயில் விபத்துக்கு தவறான சிக்னல் தான் காரணம்: உயர்மட்ட விசாரணையில் தகவல் appeared first on Dinakaran.

Tags : Odisha ,train ,New Delhi ,Odisha train accident ,Balasore ,Dinakaran ,
× RELATED ஒடிசா முதல்வருக்கு ரூ71 கோடி சொத்து