×

76 சதவீத ரூ.2000 நோட்டு வங்கிக்கு திரும்பிவி்டது: ரிசர்வ் வங்கி தகவல்

மும்பை: புழக்கத்தில் உள்ள ரூ.2000 நோட்டுகளில் 76 சதவீதம் வங்கிக்கு திரும்பி உள்ளதாக ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது. புழக்கத்தில் உள்ள ரூ.2000 நோட்டுகளை திரும்பப் பெறுவதாக ரிசர்வ் வங்கி கடந்த மே 16ம் தேதி அறிவித்தது. இதை மாற்ற செப்டம்பர் 30ம் தேதி வரை அவகாசம் வழங்கப்பட்டுள்ளது. இதைத் தொடர்ந்து பொதுமக்கள் பலரும் வங்கிகளில் ரூ.2000 நோட்டுகளை மாற்றி வருகின்றனர்.

இந்நிலையில், ரிசர்வ் வங்கி நேற்று வெளியிட்ட அறிக்கையில், ‘பல்வேறு வங்கிகளில் இருந்து பெறப்பட்ட தகவலின் அடிப்படையில், மே 16ம் தேதியில் இருந்து கடந்த ஜூன் 30ம் தேதி வரை, மொத்தம் ரூ.2.72 லட்சம் கோடிக்கான ரூ.2000 நோட்டுகள் வங்கிக்கு திரும்பி உள்ளன. அதாவது புழக்கத்தில் இருந்த ரூ.2000 நோட்டுகளில் 76 சதவீதம் திரும்பி விட்டது. இன்னும் ரூ.0.86 லட்சம் கோடிக்கான ரூ.2000 நோட்டுகள் மட்டுமே புழக்கத்தில் உள்ளன. இதில் 87 சதவீதம் வங்கி கணக்கில் டெபாசிட்களாகவும், 13 சதவீதம் வங்கிகளில் நேரடியாக கொடுத்து பிற மதிப்பு நோட்டுகளாகவும் மாற்றப்பட்டுள்ளது’ என கூறப்பட்டுள்ளது.

The post 76 சதவீத ரூ.2000 நோட்டு வங்கிக்கு திரும்பிவி்டது: ரிசர்வ் வங்கி தகவல் appeared first on Dinakaran.

Tags : RBI ,MUMBAI ,Dinakaran ,
× RELATED புதிய கிரெடிட் கார்டு வழங்கக் கூடாது...