×

ஜோஷிமத்தில் மீண்டும் விரிசல்

கோபேஸ்வர்: உத்தரகாண்டின் ஜோஷிமத் நகர் புதைய தொடங்கிய நிலையில், கடந்த ஆண்டு அங்கு 868 வீடுகளில் விரிசல் ஏற்பட்டது. இதில் 181 வீடுகள் பாதுகாப்பற்றவையாக அறிவிக்கப்பட்டது. அங்கிருந்தவர்கள் பாதுகாப்பாக வெளியேற்றப்பட்டு முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். இது தொடர்பாக நிபுணர் குழு ஆய்வு பணியில் தீவிரமாக ஈடுபட்டுள்ளது. இந்நிலையில் ஜோஷிமத் நகரில் மீண்டும் விரிசல் ஏற்பட்டுள்ளதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

சுனில் வார்டு பகுதியில், குடியிருப்பு கட்டிடம் மற்றும் ஜோஷிமத்-அவுளி மோடார் சாலைக்கு இடையே விரிசல் தோன்றியுள்ளது. சுமார் 6 அடி ஆழத்துக்கு இந்த விரிசல் காணப்படுகின்றது. இதனை பொதுமக்கள் மண் உள்ளிட்டவற்றை கொண்டு மூடியுள்ளனர். இந்நிலையில் விரிசல் ஏற்பட்ட பகுதியை அதிகாரிகள் நேரில் நேரில் சென்று பார்வையிட்டனர். கடந்த ஆண்டு பருவமழையின்போது தான் ஜோஷிமத்தில் கட்டிடங்களில் விரிசல்கள் ஏற்பட்டது. இன்னும் சில நாட்களில் பருவ மழை தொடங்க உள்ள நிலையில் விரிசல் ஏற்பட தொடங்கி இருப்பது பொதுமக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது.

The post ஜோஷிமத்தில் மீண்டும் விரிசல் appeared first on Dinakaran.

Tags : Joshimath ,Kobeswar ,Uttarakhand ,Joshimath Nagar ,
× RELATED பிரபல கல்வி நிறுவனங்களின் நுழைவுத்...