×

ஹாட் அன்ட் சோர் சிக்கன் சூப்

தேவையானவை:

கோழிக்கறி – 100 கிராம்
மிளகாய்த்தூள் – 1 தேக்கரண்டி
பொடியாக நறுக்கிய மா இஞ்சி – 1 மேஜைக் கரண்டி
நறுக்கிய லெமன் க்ராஸ் – 1 மேஜைக் கரண்டி
நறுக்கிய நார்த்தங்காய் இலை – 1 மேஜைக் கரண்டி
சிகப்பு மிளகாய் – 3
நறுக்கிய ஸிலேரி – 1 மேஜைக் கரண்டி
கோழிக்கறி வேக வைத்த தண்ணீர் (சிக்கன் ஸ்டாக்) – 2 கப்
கொத்தமல்லி இலை – 1 மேஜைக் கரண்டி
ஃபிஷ் ஸாஸ் (Fish Sauce) – 3 மேஜைக் கரண்டி
எலுமிச்சைச்சாறு – 2 மேஜைக் கரண்டி

செய்முறை :

கோழிக்கறியை மிக மெல்லிய, சிறு துண்டுகளாக நறுக்கிக் கொள்ளவும். மிளகாயை கரகரப்பாக பொடித்துக் கொள்ளவும். பாத்திரத்தில் கோழிக்கறி வேக வைத்த தண்ணீரை ஊற்றி, கொதிக்க விடவும். கொதித்ததும் கோழிக்கறி துண்டுகளை போட்டு வேக வைக்கவும்.
அதன் பின், மா இஞ்சி, லெமன் க்ராஸ், நார்த்தங்காய் இலை, ஸிலேரி, மிளகாய்த்தூள் இவற்றை சேர்க்கவும். 3 நிமிடங்கள் ஆனபின் ஃபிஷ் ஸாஸ், எலுமிச்சைச்சாறு, கொத்தமல்லி இலை சேர்த்து கிளறி, இறக்கி சூப் பரிமாறும் கிண்ணங்களில் ஊற்றி பரிமாறவும்.

The post ஹாட் அன்ட் சோர் சிக்கன் சூப் appeared first on Dinakaran.

Tags : Dinakaran ,
× RELATED கோடை வெயிலில் உடல் உஷ்ணத்தை தணிக்கும்...