×

பால்கோவா

தேவையான பொருட்கள்:

பால் – 10 லிட்டர்
சர்க்கரை – 1/2 கிலோ

செய்முறை:

தண்ணீர் கலக்காத சுத்தமான பால் 10 லிட்டர் எடுத்து கொள்ள வேண்டும். அதை ஒரு அடி கனமான பத்திரத்தில் ஊற்றி, அதை அடுப்பில் வைத்து கிண்டி கொண்டே இருக்க வேண்டும்.
கிண்டி கொண்டே இருக்க வேண்டும், கிண்டாமல் விட்டு விட்டால் பால் அடிபிடித்து விடும். பால்கோவாவின் நிறம் மற்றும் சுவை மாறி விடும். இப்படியே ஒரு 20 நிமிடம் வரை பாலினை மட்டும் கிண்டி கொண்டு இருக்க வேண்டும்.அதன் பிறகு பால் நன்கு சூடாகி கொதிக்க ஆரம்பித்த உடன் சர்க்கரையை பாலில் போட்டு மறுபடியும் கிண்ட வேண்டும். சுமார் ஒரு 15 நிமிடம் வரை கிண்டி கொண்டே இருக்க வேண்டும். இப்பொழுது பால் கட்டியாகி அதனுடன் இனிப்பும் கலந்து ஒரு வித இழகிய நிலையில் பால்கோவா வந்த பின் ஒரே முறை நன்கு கிண்டினால் நல்ல மனமுடன் கூடிய பால் மனம் மாறாத சுத்தமான பால்கோவா தயார்.

The post பால்கோவா appeared first on Dinakaran.

Tags : Balkova ,
× RELATED மதுரை ஆவினில் இருந்து தீபாவளிக்காக...