×

மேகதாதுவில் அணை கட்டும் கர்நாடகாவின் முயற்சி முறியடிக்கப்படும்: அமைச்சர் துரைமுருகன்

சென்னை: மேகதாதுவில் அணை கட்டும் கர்நாடகாவின் முயற்சி முறியடிக்கப்படும் என துரைமுருகன் தெரிவித்துள்ளார். மேகதாது அணை விவகாரத்தில் எடுக்கப்பட வேண்டிய நடவடிக்கைகள் தொடர்பாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆலோசனை மேற்கொண்டார். சென்னை தலைமைச் செயலகத்தில் நடைபெற்ற ஆலோசனையில் நீர் வளத்துறை அமைச்சர் துரைமுருகன் மற்றும் துறை சார்ந்த அதிகாரிகள் உள்ளிட்டோர் பங்கேற்றனர். மேகதாதுவில் அணை கட்ட கர்நாடக அரசு தீவிரம் காட்டி வரும் நிலையில் தமிழக அரசு எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் குறித்து கூட்டத்தில் விவாதிக்கப்பட்டதாக கூறப்படுகிறது.

இந்நிலையில் மேகதாதுவில் அணை கட்டும் கர்நாடகாவின் முயற்சி முறியடிக்கப்படும் என அமைச்சர் துரைமுருகன் அறிக்கை வெளியிட்டுள்ளார். உச்சநீதிமன்ற தீர்ப்பின் படி கர்நாடகாவில் இருந்து காவிரி நீரை பெற தேவையான முயற்சிகளை தமிழ்நாடு அரசு மேற்கொண்டுள்ளது. குருவை சாகுபடிக்காக ஜூன் 12ம் தேதி மேட்டூர் அணை திறக்கப்பட்டு, தொடர்ந்து தேவைக்கேற்ப நீர் வழங்கப்பட்டு வருகிறது. தமிழ்நாடு அரசு விவசாயிகளின் பாசனத்திற்கேற்ப நீர் அளிக்க தேவையான எல்லை நடவடிக்கைகளையும் எடுத்து வருகிறது. மேகதாதுவில் அணை காட்டும் கர்நாடக அரசின் முயற்சி முறியடிக்கப்படும்.

மேகதாது அணை பிரச்சனை குறித்து தக்க நடவடிக்கைகளை தமிழ்நாடு அரசு எடுக்கும் என்பது உறுதி. தமிழ்நாட்டின் உரிமைகளை காக்க விவசாயத்துக்கு தடையின்றி நீர் வழங்க தமிழ்நாடு அரசு நடவடிக்கை எடுக்கும். கர்நாடக அரசு உத்தேசித்துள்ள மேகதாது அணை திட்டம் உச்சநீதிமன்ற தீர்ப்புக்கு முரணானது. வழக்கு உச்சநீதிமன்றத்தில் விசாரணைக்கு வரும் போது வலுவான வாதங்களை முன்வைத்து கர்நாடகாவின் முயற்சி முறியடிக்கப்படும். மேகதாது அணை கட்ட ஒருபோதும் அனுமதிக்கக்கூடாது என பிரதமரை 3 முறை நேரில் சந்தித்து முதல்வர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

The post மேகதாதுவில் அணை கட்டும் கர்நாடகாவின் முயற்சி முறியடிக்கப்படும்: அமைச்சர் துரைமுருகன் appeared first on Dinakaran.

Tags : Karnataka ,Cloudadu ,Minister ,Thurimurugan ,Chennai ,Cloudadu Dam ,
× RELATED ஆட்சி செய்யாமல் காங்கிரஸ் வசூல் செய்கிறது : பிரதமர் மோடி