×

வேங்கைவயல் விவகாரத்தில் 4 வாரத்தில் அறிக்கை தாக்கல் செய்ய தமிழ்நாடு அரசுக்கு ஐகோர்ட் ஆணை

சென்னை: வேங்கைவயல் விவகாரத்தில் 4 வாரத்தில் அறிக்கை தாக்கல் செய்ய தமிழ்நாடு அரசுக்கு ஐகோர்ட் ஆணையிட்டுள்ளது. நீதிபதி சத்தியநாராயணன் ஆணையத்தின் விசாரணை நிலை குறித்து
4 வாரத்தில் அறிக்கை தாக்கல் செய்ய ஐகோர்ட் உத்தரவு அளித்துள்ளது. வேங்கைவயலில் குடிநீர் தொட்டியில் மனித கழிவு கலக்கப்பட்ட விவகாரத்தை நீதிபதி சத்தியநாராயணன் ஆணையம் விசாரிக்கிறது. வெள்ளனூர் காவல் நிலையத்தில் பதியப்பட்ட வழக்கை சி.பி.ஐ.க்கு மாற்றக் கோரி ராஜ்கமல் என்பவர் வழக்கு தொடர்ந்தார். குடிநீரில் மனிதக்கழிவு கலக்கப்பட்ட யாரும் கைது விவகாரத்தில் இதுவரை செய்யப்படவில்லை. வேங்கைவயலில் குடிநீரில் மனிதக்கழிவு கலக்கப்பட்ட வழக்கின் விசாரணை நிலை என்ன என்று உயர்நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது.

புதுக்கோட்டை மாவட்டம் வேங்கைவயலில் பட்டியலின மக்கள் பயன்படுத்தும் மேல்நிலை நீர்த்தேக்க தொட்டியில் மனித மலம் கலக்கப்பட்ட விவகாரம் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இந்த வழக்கை விசாரித்த சிபிசிஐடி போலீசார், 11 பேருக்கு டிஎன்ஏ பரிசோதனை செய்ய பரிந்துரைத்திருந்தனர். ஆனால், அதில் 3 பேர் மட்டுமே டிஎன்ஏ பரிசோதனைக்கு தங்களை உட்படுத்திக் கொண்ட நிலையில், மற்ற 8 பேர் மறுப்பு தெரிவித்து வந்தனர். புதுக்கோட்டை மாவட்டம், வேங்கைவயல் தலித் குடியிருப்பின் மேல்நிலை நீா்த்தேக்கத் தொட்டியில் மனிதக் கழிவு கலக்கப்பட்ட சம்பவம் தொடா்பாக விசாரிக்கும் சிபி சிஐடி போலீஸாா், தொட்டியில் கலக்கப்பட்ட மனிதக் கழிவின் மரபணுவை வேங்கைவயல் மற்றும் இறையூா் பகுதி மக்களின் மரபணுவுடன் ஒப்பிட்டுப் பாா்க்க முடிவு செய்தனா்.

இதுதொடா்பாக கடந்த ஏப்ரலில் 11 பேருக்கு மரபணு பரிசோதனைக்கான ரத்த மாதிரிகள் சேகரிக்க நீதிமன்ற அனுமதி பெறப்பட்டது. ஆனால், 3 போ் மட்டுமே ரத்த மாதிரிகளைக் கொடுக்க வந்தனா். 8 போ் வரவில்லை. தொடா்ந்து, உயா் நீதிமன்ற மதுரைக் கிளையிலும் வழக்குத் தொடா்ந்தனா். அந்த வழக்கில், மனுதாரா்களின் கருத்தையும் விசாரணை நீதிமன்றத்தில் பதிவு செய்து நடவடிக்கை எடுக்க உத்தரவிடப்பட்டது. இதன்படி புதுக்கோட்டை மாவட்ட எஸ்சி எஸ்டி வன்கொடுமைத் தடுப்புச் சட்ட சிறப்பு நீதிமன்றத்தில் 8 பேரும் வெள்ளிக்கிழமை ஆஜராயினா்.

அப்போது அவா்களிடம் சிபி சிஐடி போலீஸாா் மரபணு பரிசோதனை செய்யக் கோருவது குறித்து சனிக்கிழமை பிற்பகல் ஆஜராகி கருத்துகளைத் தெரிவிக்கலாம் என விளக்கப்பட்டது. அதன்படி நீதிபதி எஸ். ஜெயந்தி முன்னிலையில் சனிக்கிழமை பிற்பகல் 2 மணிக்கு மீண்டும் ஆஜரான 8 பேரும் மரபணு பரிசோதனையில் தங்களுக்கு உடன்பாடு இல்லை என்றும், பாதிக்கப்பட்ட தங்களையே குற்றவாளிகளாக சித்தரிக்க போலீஸாா் முயற்சிப்பதாகவும் தெரிவித்தனா். வேங்கைவயலில் குடிநீரில் மனிதக்கழிவு கலக்கப்பட்ட வழக்கின் விசாரணை நிலை என்ன என்று உயர்நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது. இந்நிலையில் வேங்கைவயல் விவகாரத்தில் 4 வாரத்தில் அறிக்கை தாக்கல் செய்ய தமிழ்நாடு அரசுக்கு ஐகோர்ட் ஆணையிட்டுள்ளது.

The post வேங்கைவயல் விவகாரத்தில் 4 வாரத்தில் அறிக்கை தாக்கல் செய்ய தமிழ்நாடு அரசுக்கு ஐகோர்ட் ஆணை appeared first on Dinakaran.

Tags : Tamil Nadu government ,Vengai Valley ,Chennai ,ICourt ,Vengai ,Justice ,Sathyanarayanan ,Venkaivyal ,Dinakaran ,
× RELATED மலைச்சரிவுகளைத் தடுத்து மக்களைக்...