×

ஈக்களை விரட்ட ஈஸியான வழி

கோடைகாலம் வந்து விட்டால் பொன்நிறத்தில் ‘கம கம’ வாசனையுடன் மாம்பழங்கள் வரிசைகட்டி நிற்கும். மேலும் கோடை விடுமுறை என்பதால் நாமும் வீட்டில் பழச்சாறுகள், துவங்கி குழந்தைகளுக்கு ஏராளமான தின்பண்டங்கள் வரை வாங்கி வைத்துவிடுவோம். இதனைப் பார்த்துவிட்டால், ஈக்களுக்கோ கொண்டாட்டம்தான். நமக்கோ, வீட்டிற்குள் பழங்கள், தின்பண்டங்கள், உணவுப் பொருட் களின் மீது வந்தமரும் ஈக்களைப் பார்த்தால் அருவருப்பும், எரிச்சலும் வரும். தொல்லை தரும் ஈக்களை, வீட்டிலிருக்கும் பொருட்களை வைத்தே விரட்டியடிக்கலாம்.

*ஒரு ஆப்பிளை நான்காக நறுக்கி, அதில் கிராம்புகளை சொருகி, சமையலறை, படுக்கையறை, ஹால் மற்றும் ஈக்கள் சுற்றும் இடங்களில் வைக்கவும். கிராம்பு வாசனை ஈக்களுக்குப் பிடிக்காமல், வெளியேறிவிடும்.
*வீட்டின் மூலைகளில் புதினா மற்றும் துளசி இலைகளை கசக்கிப் போடவும். மஞ்சள் தூள் மற்றும் கல் உப்பையும் மூலைகளில் தூவிவிட்டால் ஈக்கள் ஓடிவிடும்.
*ஒரு ஸ்ப்ரே பாட்டிலில் வினிகர் இரண்டு ஸ்பூன், சிவப்பு மிளகாய்ப்பொடி ஒரு ஸ்பூன் மற்றும் நான்கு ஸ்பூன் தண்ணீர் கலந்து ஈக்கள் நடமாடும் இடங்களில் ஸ்ப்ரே செய்து விட்டால் ஈக்கள் தலை தெறிக்க ஓடிவிடும்.
*துளசி இலைகளை ஒரு கைப்பிடி எடுத்து நீரில் சற்று நேரம் கொதிக்க வைத்து, ஸ்ப்ரே செய்யலாம்.
*கட்டி கற்பூரத்தை (பச்சைக் கற்பூரம்) ஆங்காங்கே வைத்தால் ஈக்கள் தொல்லையும் இருக்காது. வீடும் நறுமணமாக இருக்கும்.
*வேம்பு, யூகலிப்டஸ், லாவண்டர், பெப்பர்மின்ட், லெமன்கிராஸ் இவற்றில் ஏதாவது ஒன்றைத் தண்ணீரில் கலந்து அங்கங்கே ஸ்பிரே செய்து விடவும்.
*வீடு துடைக்கும்போது பக்கெட் நீரில் கல்உப்பு, இஞ்சிச்சாறு, ஆப்பிள் சிடர் வினிகர் இவற்றைக் கலந்து வீடு துடைத்தால் தரையும் பளிச்சென ஆகிவிடும். ஈக்களும் எட்டிப்பார்க்காது.
– எஸ்.விஜயலட்சுமி

The post ஈக்களை விரட்ட ஈஸியான வழி appeared first on Dinakaran.

Tags : Dinakaran ,
× RELATED பிரபல நிறுவனங்கள் தயாரிக்கும்...