×

கிருஷ்ணகிரி கேஆர்பி அணையில் இருந்து 9012 ஏக்கர் நிலம் பாசனம் பெறும் வகையில் முதல்போக சாகுபடிக்கு தண்ணீர் திறப்பு!

கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி கேஆர்பி அணையில் இருந்து 9012 ஏக்கர் நிலம் பாசனம் பெறும் வகையில் முதல்போக சாகுபடிக்கு தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது. மாவட்ட ஆட்சியர் மற்றும் சட்டமன்ற, நாடாளுமன்ற உறுப்பினர் தண்ணீரை திறந்து வைத்தனர். கிருஷ்ணகிரியில் தென்பெண்ணை ஆற்றின் குறுக்கே கேஆர்பி அணை கட்டப்பட்டுள்ளது 52 அடி உயரம் கொண்ட இந்த அணையில் இருந்து ஆண்டுதோறும் இரண்டு போக சாகுபடிக்கு தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது. இதன் மூலம் 9012 ஏக்கர் நிலம் நேரடியாகவும் சுமார் பத்தாயிரம் ஏக்கர் நிலம் மறைமுகமாகவும் பாசனம் பெறுகிறது.

இந்த நிலையில் முதல் போக சாகுபடிக்கு கேஆர்பி அணையிலிருந்து தண்ணீர் திறக்க வேண்டும் என விவசாயிகள் அரசுக்கு கோரிக்கை விடுத்திருந்தனர். அந்த வகையில் விவசாயிகளின் கோரிக்கையை ஏற்று இன்று முதல் கேஆர்பி அணையில் இருந்து முதல்போக சாகுபடிக்கு தண்ணீர் திறக்க முதலமைச்சர் உத்தரவிட்டிருத்தார். அதன்படி இன்று கேஆர்பி அணையில் இருந்து முதல்போக சாகுபடிக்காக மாவட்ட ஆட்சியர் சரயு, நாடாளுமன்ற உறுப்பினர் செல்லகுமார், சட்டமன்ற உறுப்பினர் மதியழகன் ஆகியோர் அணையின் வலது மற்றும் இடது புற கால்வாய் மூலமாக தண்ணீரை திறந்து விட்டனர்.

52 அடி உயரம் கொண்ட அணையில் தற்போது 50 அடிக்கு நீர் இருப்பு உள்ள நிலையில் அணையில் இருந்து பாசனத்துக்காக வலதுபுற கால்வாய் மூலமாக விநாடிக்கு 75 கன அடி வீதமும், இடதுபுற கால்வாய் மூலமாக விநாடிக்கு 76 கன அடி வீதமும் மொத்தமாக விநாடிக்கு 151 கனஅடி நீர் 130 நாட்களுக்கு திறந்து விடப்படுகிறது. இதன் மூலம் பெரிய முத்தூர், சுண்டேகுப்பம், திம்மாபுரம், தள்ளிஅள்ளி, காவேரிப்பட்டினம் உள்ளிட்ட 16 ஊராட்சிகளில் உள்ள 9012 ஏக்கர் நிலம் நேரடியாகவும் சுமார் பத்தாயிரம் ஏக்கர் நிலம் இதர ஏரி குளங்கள் மூலமாகவும் பாசனம் பெறுகிறது. தற்போது திறக்கப்பட்ட உள்ள நீரை சிக்கனமாக பயன்படுத்தி சிறப்பாக சாகுபடி செய்துகொள்ளுமாறு விவசாயிகளுக்கு மாவட்ட ஆட்சியர் சரயு அறிவுறுத்தி உள்ளார்.

The post கிருஷ்ணகிரி கேஆர்பி அணையில் இருந்து 9012 ஏக்கர் நிலம் பாசனம் பெறும் வகையில் முதல்போக சாகுபடிக்கு தண்ணீர் திறப்பு! appeared first on Dinakaran.

Tags : Krishnagiri KRP Dam ,Krishnagiri ,KRP Dam ,
× RELATED வறட்சியால் பாதிக்கப்பட்ட மாமரங்கள் கணக்கெடுப்பு