×

பாகிஸ்தானுக்கு எதிரான போட்டியில் விராட் கோலி புதிய சாதனை: கோலியின் செயலுக்கு நெட்டிசன்கள் பாராட்டு

துபாய்: பலத்த எதிர்பார்ப்புக்கிடையே நடந்த உலகக்கோப்பை டி20 இந்தியா பாகிஸ்தான் போட்டியில் டாஸ் வென்ற பாகிஸ்தான் அணி முதலில் பவுலிங்கை தேர்வு செய்தது. பாகிஸ்தான் பணித்தப்படி முதலில் இந்தியா பேட்டிங் செய்தது. இந்திய அணிக்காக ரோஹித் சர்மாவும், கே எல் ராகுலும் இன்னிங்சை தொடங்கினர். இங்கிலாந்து மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கு எதிரான பயிற்சி ஆட்டத்தில் இந்தியா அசத்தலான வெற்றியை பதிவு செய்திருந்தது. அது இந்திய அணிக்கு பாசிட்டிவ்வான தொடக்கமாக அமைந்தது. ஆனால் அதனை இந்த ஆட்டத்தில் தொடர தொடக்க வீரர்கள் தவறிவிட்டனர்.முதல் ஓவரில் ரோகித் சர்மாவும், மூன்றாவது ஓவரில் ராகுலும் அவுட் ஆகி வெளியேறினர். 6 ரன்களுக்கு 2 விக்கெட்களை இழந்திருந்தது இந்தியா. இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி இந்த ஆட்டத்தில் சிறப்பாக விளையாடி இருந்தார். ஒருபக்கம் பவர் பிளே ஓவர் முடிவதற்குள் இந்தியா 3 விக்கெட்களை இழந்திருந்தாலும் கோலி களத்தில் நின்று விளையாடினார். 47 பந்துகளில் 57 ரன்கள். இதில் 5 பவுண்டரிகளும், 1 சிக்ஸரும் அடங்கும். அதோடு டி20 உலகக்கோப்பையில் அதிக அரைசதங்களை பதிவு செய்த பேட்ஸ்மேன் என்ற ரெக்கார்டை கோலி படைத்திருந்தார். மறுபுறம் இந்திய அணி தரப்பில் விக்கெட்களை இழந்துவந்தனர். 20 ஓவர்கள் முடியில் 151 ரன்கள் எடுத்தது இந்தியா. பாகிஸ்தான் அணியின் ஷஹீன் அப்ரிடி. இந்தியாவின் டாப் ஆர்டர் பேட்ஸ்மேன்களின் விக்கெட்களை வீழ்த்தினார். முதல் ஓவரில் ரோஹித் சர்மா, மூன்றாவது ஓவரில் கே.எல் ராகுல் என இருவரையும் பவர் பிளேயில் வீழ்த்தி இருந்தார். களத்தில் செட் ஆகி இருந்த கோலியை 57 ரன்கள் எடுத்த நிலையில் வெளியேற்றினார். 19ஆவது ஓவரில் கோலியை அவர் அவுட் செய்தார்.152 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற டார்க்கெட்டை ஜேஸ் செய்தது பாகிஸ்தான். அந்த அணிக்காக கேப்டன் பாபர் ஆசம் மற்றும் முகமது ரிஸ்வான் தொடக்க வீரர்களாக களமிறங்கினர். இருவரும் அடித்து ஆடி ரன்களை குவித்தனர். பாபர் 40 பந்துகளில் அரைசதத்தை பதிவு செய்தார். மறுபக்கம் ரிஸ்வான் 41 பந்துகளில் அரைசத்தை பதிவு செய்தார். இந்திய அணியின் பவுலர்கள் விக்கெட்களை வீழ்த்த தவறினர். முடிவில் பாகிஸ்தான் அணி வெற்றி பெற்றது. முதல் முறையாக பாகிஸ்தானுக்கு எதிராக டி20 உலக கோப்பையில் கோலி இந்த போட்டியில் அவுட்டாகியுள்ளார். அதோடு அதிகபட்சமாக 4 இன்னிங்ஸ் விளையாடி 228களை பாகிஸ்தானுக்கு எடுத்துள்ளார் கோலி . இது பாகிஸ்தான் அணிக்கு எதிராக டி20 உலக கோப்பையில் தனி ஒரு பேட்ஸ்மேன் குவித்துள்ள அதிகபட்ச ரன்களாகும். இது தொடரின் ஆரம்பம் தான். கடைசி அல்ல. மீண்டெழுவோம் என தோல்விக்கு பிறகு இந்திய அணியின் கேப்டன் தெரிவித்திருந்தார்.போட்டிக்குப் பிறகு பாகிஸ்தான் வீரர்களை நோக்கி சென்ற கேப்டன் விராட் கோலி, முகமது ரிஸ்வானின் ஆட்டத்தை பாராட்டினார். அவரை நெஞ்சோடு அணைத்து வாழ்த்து தெரிவித்தார். அதேபோல, பாபர் அசாமுக்கும் வாழ்த்து தெரிவித்தார். இந்த வீடியோவை சமூக வலைதளத்தில் பகிர்ந்துள்ள நெட்டிசன்கள், விராட் கோலியின் செயலை பாராட்டியுள்ளனர். விளையாட்டை விளையாட்டாகவே பார்க்க வேண்டும் என்றும் இந்த புகைப்படம் பேசாத வார்த்தைகள் அதிகம் என்றும் அவர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்….

The post பாகிஸ்தானுக்கு எதிரான போட்டியில் விராட் கோலி புதிய சாதனை: கோலியின் செயலுக்கு நெட்டிசன்கள் பாராட்டு appeared first on Dinakaran.

Tags : Virat Kohli ,Pakistan ,Kohli ,Dubai ,World Cup T20 India Pakistan tournament ,World World Cup ,India ,Goli ,Dinakaran ,
× RELATED பாக். தலைமை தேர்தல் ஆணையர் பதவி விலக...