×

கர்நாடகம் மேகதாது அணை கட்ட முயன்றால் அனைத்து கட்சிகளும் போராடுவோம்: முத்தரசன் பேட்டி

வேலூர்: கர்நாடகம் மேகதாது அணையை கட்ட முயன்றால் தமிழ்நாட்டில் உள்ள அனைத்து கட்சிகளும் இணைந்து போராட்டத்தில் ஈடுபடுவோம் என்று இந்திய கம்யூனிஸ்ட் மாநில செயலாளர் முத்தரசன் கூறினார். வேலூர் மாவட்டம் காட்பாடியில் இந்திய கம்யூனிஸ்ட் மாவட்ட கோரிக்கை மாநாடு மாவட்ட செயலாளர் லதா தலைமையில் நேற்று நடந்தது. இதில் அக்கட்சியின் மாநில செயலாளர் முத்தரசன் கலந்து கொண்டு கொடி ஏற்றி வைத்து மாநாட்டை தொடங்கி வைத்தார். பின்னர் முத்தரசன் அளித்த பேட்டி: தமிழக ஆளுநர், அவரது பணியை தவிர மற்ற பணிகளை செய்கிறார்.

எனவே அவரை ஒன்றிய அரசு உடனடியாக திரும்ப பெற வேண்டும். கர்நாடக அரசு காவிரி நதி நீர் ஆணையம் அறிவித்துள்ளபடி தமிழகத்திற்குரிய நீர் பங்கீட்டினை உடனடியாக வழங்க வேண்டும். கர்நாடகா துணை முதல்வர் சிவகுமார் மேகதாதுவில் அணையை கட்ட முயற்சிப்பதாக எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளார். அவர் அப்படித்தான் பேச வேண்டும்.அணையை கட்ட கர்நாடகத்தில் தொடர்ந்து முயற்சிகள் மேற்கொள்ளபடுமானால் தமிழகத்தில் உள்ள திமுக உட்பட அனைத்து கட்சிகளும் ஒருங்கிணைந்து போராட்டத்தில் ஈடுபடுவோம். இவ்வாறு அவர் கூறினார்.

The post கர்நாடகம் மேகதாது அணை கட்ட முயன்றால் அனைத்து கட்சிகளும் போராடுவோம்: முத்தரசன் பேட்டி appeared first on Dinakaran.

Tags : Karnataka ,Mutharasan ,Vellore ,Tamil Nadu ,India ,Dinakaran ,
× RELATED நாடு மதித்து போற்றும் தலைவர்களை...