×

மராட்டிய முதலமைச்சர் ஏக்நாத் ஷிண்டே தலைமையில் மராட்டிய துணை முதல்வராக பதவியேற்றார் அஜித் பவார்!

மகாராஷ்ட்ரா: மராட்டிய முதலமைச்சர் ஏக்நாத் ஷிண்டே தலைமையில் மராட்டிய துணை முதல்வராக அஜித் பவார் பதவியேற்றார். ஆளுநர் மாளிகையில் நடைபெறும் பதவியேற்பு விழாவில் அஜித் பவாருக்கு மராட்டிய ஆளுநர் பதவிப் பிரமாணம் செய்து வைத்தார். அஜித் பவாரின் ஆதரவு எம்.எல்.ஏ.க்கள் 9 பேர் அமைச்சர்களாக பதவியேற்ற்றனர். தேசியவாத காங்கிரஸ் கட்சித் தலைவர் சரத் பவார் உடனான மோதலால் அஜித் பவார் கட்சியை உடைத்தார். இதைத்தொடர்ந்து தேசியவாத காங்கிரசில் இருந்து அஜித்பவார் உள்ளிட்டோர் விலகி ஆளும் பாஜக கூட்டணியில் இன்று இணைந்தனர்.

இந்தநிலையில், சிவசேனா – பாஜக கூட்டணி அரசில் அமைச்சராக பதவியேற்றுக் கொண்டார் தேசியவாத காங்கிரஸ் மூத்த தலைவர் அஜித்பவார். அஜித் பவார் மற்றும் அவரது ஆதரவாளர்கள் 9 பேருக்கு ஆளுநர் பதவிப் பிரமாணம் செய்துவைத்தார். ஏற்கனவே தேவேந்திர பட்னாவிஸ் துணை முதலமைச்சராக உள்ள நிலையில் அஜித் பவாரும் துணை முதலமைச்சராக பதவியேற்றுக்கொண்டார். எதிர்க்கட்சி தலைவர் பதவியை ராஜினாமா செய்து விட்டு பதவி ஏற்றுக்கொண்டார். மராட்டிய மாநிலத்தில் 8வது துணை முதலமைச்சராக அஜித் பவார் பதவியேற்றுக்கொண்டார்.

2019ல் பாஜகவுடன் இணைந்து மராட்டிய துணை முதலமைச்சராக பதவியேற்று பின்னர் விலகினார். பதவியேற்ற 80 மணி நேரத்தில் துணை முதலமைச்சர் பதவியில் இருந்து விலகி தேசியவாத காங்கிரசில் மீண்டும் இணைந்தார். பின்னர், காங்கிரஸ் உள்ளிட்ட மகா விலாஸ் அகாதி கூட்டணியில் அஜித் பவார் மீண்டும் துணை முதலமைச்சராக ஆனார். மராட்டியத்தில் 2010-2014-ம் ஆண்டுகளில் காங்கிரஸ் கூட்டணி அரசில் இருமுறை துணை முதலமைச்சராக இருந்துள்ளார்.

2019-ம் ஆண்டில் திடீரென அதிகாலை பாஜகவுடன் கூட்டணி அமைத்து முதலமைச்சர் ஆனார், ஆனால், பெரும்பான்மை இல்லாததால் 3 நாட்கள் மட்டுமே பதவியில் இருந்தார். 2019-2022 வரை சிவசேனா, காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ் உள்ளிட்ட கூட்டணி ஆட்சியில் உத்தவ் தாக்கரே அரசில் துணை முதலமைச்சராக இருந்தார். தற்போது மீண்டும் தேசியவாத காங்கிரஸ் கட்சியை உடைத்து பாஜக கூட்டணியில் இணைந்து துணை முதலமைச்சராக பதவியேற்றுக்கொண்டார்.

The post மராட்டிய முதலமைச்சர் ஏக்நாத் ஷிண்டே தலைமையில் மராட்டிய துணை முதல்வராக பதவியேற்றார் அஜித் பவார்! appeared first on Dinakaran.

Tags : Chief Minister ,Egnath Shinde ,Deputy Chief Minister ,Ajit Bawar ,Maharashtra ,Maratha Deputy Chief Minister ,House ,
× RELATED ஆந்திர மாநில துணை முதலமைச்சராக பவன்...