- காவிரி
- சாயல்குடி
- காவிரியாற்றங்கரையிளுள்ளதோர்
- திருநெல்வேலி செல்லியம்மன் கோயில்
- சவதி-சாயல்குடி சாலை
- காவிரி கூட்டுநீர்
- தின மலர்
சாயல்குடி, ஜூலை 2: கடலாடி-சாயல்குடி சாலையிலுள்ள பேச்சியம்மன் கோயில் அருகே காவிரி கூட்டு குடிநீர் குழாய் உடைந்து தண்ணீர் வீணாகி வருவதால். சீரமைக்க பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். ராமநாதபுரம் காவிரி கூட்டு குடிநீர் திட்டம் கடந்த ஓராண்டிற்கு மேலாக தமிழ்நாடு குடிநீர்வடிகால் வாரியம் சார்பாக மாவட்டத்தின் அனைத்து பகுதிகளிலும் குழாய்கள், சேதங்கள் சீரமைத்து சீரான குடிநீர் விநியோகம் செய்யும் பணி தொடர்ந்து நடந்து வருகிறது. இந்நிலையில் கடலாடியிலிருந்து மலட்டாறு செல்லும் சாலையிலுள்ள பேச்சியம்மன்கோயில் அருகே உள்ள தனியார் சேம்பரின் கிழக்கு பகுதியில் சாலையோரம் செல்லும் குழாயில் சுமார் 3 இடங்களில் உடைப்பு ஏற்பட்டு, கடந்த ஒரு வாரமாக காட்டுப்பகுதியில் தண்ணீர் வீணாகி ஓடி வருவதால் பல ஆயிரம் லிட்டர் தண்ணீர் வீணாகி வருகிறது. இதனால் கடலாடிக்கு தெற்கு மற்றும் கிழக்கு பகுதிகளிலுள்ள சுமார் 20க்கும் மேற்பட்ட கிராமங்களுக்கு தண்ணீர் செல்வதில் அளவு குறைவதாக கூறப்படுகிறது. எனவே காவிரி கூட்டுகுடிநீர் குழாயில் ஏற்பட்டுள்ள உடைப்புகளை சீரமைத்து அனைத்து கிராமங்களுக்கும் சீரான குடிதண்ணீர் விநியோகம் செய்ய தமிழ்நாடு குடிநீர் வாரியம் நடவடிக்கை எடுக்கவேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
The post கடலாடி அருகே குழாய் உடைப்பால் வீணாகி வரும் காவிரி கூட்டுகுடிநீர் appeared first on Dinakaran.