×

லாரி டிரைவரை தாக்கிய 3 பேர் கைது

ஜெயங்கொண்டம், ஜூலை2: லாரி டிரைவரை தாக்கிய 3 பேரை போலீசார் கைது செய்தனர். அரியலூர் மாவட்டம் தேளூர் சிவன் கோயில் தெருவை சேர்ந்த குமாரசாமி மகன் விஜய்(28).லாரி டிரைவர். இவர் கடந்த 29ம் தேதி இரவு டிப்பர் லாரியில் லைம் ஸ்டோன் ஏற்றிக்கொண்டு மண்ணுழி சமத்துவபுரம் அருகே செல்லும் போது மண்ணுழி கிழக்கு தெருவை சேர்ந்த திருநாவுக்கரசு மகன் ரஞ்சித் குமார்(27), சீனிவாசன் மகன் சத்தியமூர்த்தி(30),செல்வராசு மகன் ரஞ்சித் குமார்(29) ஆகியோர் லாரியை வழிமறித்து விஜயை தகாத வார்த்தையால் திட்டி தாக்கியுள்ளனர்.இது குறித்து கயர்லாபாத் போலீஸ் ஸ்டேஷனில் விஜய் அளித்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிந்து 3 பேரையும் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

The post லாரி டிரைவரை தாக்கிய 3 பேர் கைது appeared first on Dinakaran.

Tags : Jayangondam ,Ariyalur District Telur Shiva Temple ,Dinakaran ,
× RELATED ஜெயங்கொண்டத்தில் பிளாஸ்டிக் பைகள் விற்ற கடைகளுக்கு அபராதம்