×

கொங்கணாபுரம் சந்தையில் 10 ஆயிரம் ஆடுகள் விற்பனை

இடைப்பாடி, ஜூலை 2: ஆடி திருவிழாவை முன்னிட்டு, கொங்கணாபுரம் வாரச்சந்தையில் நேற்று ₹5.50 லட்சத்துக்கு வர்த்தகம் நடந்ததாக வியாபாரிகள் தெரிவித்தனர். இடைப்பாடி அடுத்த கொங்கணாபுரத்தில், நேற்று வாரச்சந்தை கூடியது. ஆடி மாதம் பிறக்கவுள்ளதால், மாவட்டத்தில் பரவலாக கோயில் திருவிழாக்கள் நடைபெறவுள்ளது. இடைப்பாடி சுற்றுவட்டார பகுகுதிகளில் உள்ள கோயில்களில் தற்போது பண்டிகை நடைபெற்று வருவதால் நேற்றைய சந்தைக்கு 10 ஆயிரம் ஆடுகள் விற்பனைக்கு வந்திருந்தது. 4,300 நாட்டுக்கோழி மற்றும் பந்தய சேவல்கள் மற்றும் 185 டன் காய்கறிகள் விற்பனைக்கு குவிந்தது. நேற்று அதிகாலை முதலே சந்தையில் வியாபாரம் களைகட்டியது.

சந்தையில் 10 கிலோ எடையுள்ள வெள்ளாடு, செம்மறி ஆடு ₹5,800 முதல் ₹7,000 வரையும், 20 கிலோ எடையுள்ள ஆடு ₹13 ஆயிரம் முதல் ₹15 ஆயிரம் வரையும், வளர்ப்பு குட்டி ஆடு ₹2,500 முதல் ₹3,000 வரையும், 30 கிலோ எடையுள்ள கிடாய் ஆடு ₹18 ஆயிரம் முதல் ₹23 ஆயிரம் வரையும் விலைபோனது. பந்தய சேவல்கள் ₹2 ஆயிரம் முதல் ₹6 ஆயிரம் வரையும், நாட்டுக்கோழி ₹200 முதல் ₹2 ஆயிரம் வரை விற்பனையானது. தவிர காய்கறிகள் விற்பனையும் அதிகரித்தது. ஒட்டு மொத்தமாக நேற்றைய சந்தையில் ₹5.50 கோடிக்கு வர்த்தகம் நடந்ததாக வியாபாரிகள் தெரிவித்தனர்.

The post கொங்கணாபுரம் சந்தையில் 10 ஆயிரம் ஆடுகள் விற்பனை appeared first on Dinakaran.

Tags : Konkanapuram ,Ethapadi ,Adi festival ,Konganapuram ,Dinakaran ,
× RELATED புயலுக்கு கேட்ட நிவாரணம்...