×

கிரிக்கெட் லீக் போட்டி காஸ்மோ வில்லேஜ் அணி வெற்றி

கோவை, ஜூலை 2: தமிழ்நாடு கிரிக்கெட் சங்கம் மற்றும் கோவை மாவட்ட கிரிக்கெட் சங்கம் சார்பாக மாவட்ட அளவிலான கிரிக்கெட் லீக் போட்டிகள் கோவையில் உள்ள பல்வேறு இடங்களில் நடைபெற்று வருகிறது. அதன் ஒரு பகுதியாக, முதல் டிவிஷன் போட்டி கோவை பீளமேட்டில் உள்ள ஒரு தனியார் மருத்துவ கல்லூரி மைதானத்தில் நடைபெற்றது. இந்த போட்டியில் காஸ்மோ வில்லேஜ் அணியுடன் திருப்பூர் கிரிக்கெட் கிளப் அணி மோதியது. இதில் முதலில் விளையாடிய திருப்பூர் கிரிக்கெட் கிளப் அணி 50 ஓவரில் 6 விக்கெட் இழப்பிற்கு 213 ரன்கள் எடுத்தது. இந்த அணி சார்பாக விளையாடிய ப்ரதோஷ் 54 ரன்களும், சோமசுந்தரம் 46 ரன்களும், காட்வின் ரூபேஷ் 41 ரன்களும் எடுத்தனர். சோம சுந்தரம் 39 ரன்கள் கொடுத்து 4 விக்கெட்களை எடுத்தனர்.
அடுத்து விளையாடிய காஸ்மோ வில்லேஜ் அணி 37.2 ஓவரில் 6 விக்கெட் இழப்பிற்கு 219 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது. இந்த அணி சார்பாக விளையாடிய ராஜேஷ் 76 ரன்களும், கெளதம் 39 ரன்களும், அரவிந்த் 54 ரன்களும் எடுத்து அணியின் வெற்றிக்கு வழிவகுத்து கொடுத்தனர்.

இரண்டாவது டிவிஷன் போட்டி கோவை அவினாசி சாலையில் உள்ள சிஐடி கல்லூரியில் நடைபெற்றது. இந்த போட்டியில் ஆறுமுகம் இளவன் பேட்ராயிட்ஸ் கிரிக்கெட் கிளப் அணியுடன் எஸ்என்ஆர் சன்ஸ் ட்ரஸ்ட் ஸ்போர்ட்ஸ் கிளப் அணி மோதியது.
இதில், முதலில் விளையாடிய எஸ்என்ஆர் சன்ஸ் 38.3 ஓவரில் அனைத்து விக்கெட்களையும் இழந்து 130 ரன்கள் எடுத்தது. இந்த அணி சார்பாக விளையாடிய வசந்தகுமார் 4 விக்கெட்களும். கெளதம் 4 விக்கெட்களும் எடுத்தனர். அடுத்து விளையாடிய ஆறுமுகம் இளவன் பேட்ராயிட்ஸ் கிரிக்கெட் கிளப் அணி 38.4 ஓவரில் 139 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது. இந்த அணி சார்பாக விளையாடிய மோஹன ப்ரசாத் மற்றும் க்ரிஷ்மந்த்ரி ஆகியோர் தலா 3 விக்கெட்களை எடுத்தனர்.

 

The post கிரிக்கெட் லீக் போட்டி காஸ்மோ வில்லேஜ் அணி வெற்றி appeared first on Dinakaran.

Tags : Cricket League match ,Cosmo Village ,Govai ,Tamil Nadu Cricket Association ,Goai District Cricket Association ,Cosmo Village Team ,Dinakaran ,
× RELATED கோடை விடுமுறையில் பள்ளி...