×

காங்கயம் அருகே லாரி-கார் மோதி விபத்து

காங்கயம், ஜூலை 2: காங்கயம் அருகே லாரி-கார் மோதிய விபத்தில் டிரைவர் அதிஷ்டவசமாக உயிர் தப்பினார்.காங்கயம், கரூர் சாலை, முத்தூர் பிரிவு அருகே நேற்று மதியம், கரூரில் இருந்து கோவை நோக்கி வந்த காரும், கோவையில் இருந்து கரூர் நோக்கி சென்ற லாரியும் எதிர்பாராத விதமாக நேருக்கு நேர் மோதிக் கொண்டது. இந்த விபத்தில் காரின் முன்பகுதி பலத்த சேதம் ஆனது. அதிஷ்டவசமாக கார் ஓட்டுநர் காயங்களுடன் உயிர் தப்பினார். இதை பார்த்த அருகில் இருந்தவர்கள் ஓடி வந்து, காருக்குள் படுகாயங்களுடன் இருந்த, கரூர் மாவட்டம், வடக்கு காந்தி நகர் பகுதியை சேர்ந்த சக்திவேல் (35) என்பவரை மீட்டு ஆம்புலன்ஸ் மூலம் காங்கயம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த விபத்து குறித்து காங்கயம் போலீசார் விசாரித்து வருகின்றனர்.

The post காங்கயம் அருகே லாரி-கார் மோதி விபத்து appeared first on Dinakaran.

Tags : Gangaim ,Kangayam ,Karur Road ,Muttur ,Dinakaran ,
× RELATED வைக்கோல் ஏற்றி வந்த வேன் மின் ஒயர் உரசி தீ பற்றியது