×

காங்கயம் அருகே சாலையோரம் வளர்ந்துள்ள புதரால் ஊர் பெயர் பலகை மறைப்பு

காங்கயம்,ஜூலை2: காங்கயம் அருகே சாலையோரத்தில் உள்ள ஊர் பெயர் பதாகையை சூழ்ந்துள்ள செடி கொடிகளை அப்புறப்படுத்த வேண்டும் என வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.காங்கயம், கோவை சாலை போக்குவரத்து மிகுந்த சாலையாகும். இந்த சாலை வழியாக தினசரி அதிக அளவில் வாகனங்கள் சென்று வருகின்றன. இந்நிலையில் காங்கயம் – கோவை சாலையில், கவுண்டம்பாளையம் பஸ் நிறுத்தம் அருகே சாலையோரத்தில் நெடுஞ்சாலை துறை சார்பில் சிவன்மலை செல்லும் வழி என்று அம்புக்குறி காட்டப்பட்ட திசைகாட்டும் ஊர் பெயர் பலகை வைக்கப்பட்டுள்ளது.

தற்போது இந்த திசைகாட்டும் ஊர் பெயர் பலகையை செடி,கொடிகள் சூழ்ந்து ஊர் பெயரே தெரியாத அளவில் உள்ளது. இதன் காரணமாக அந்த வழியாக செல்லும் வாகன ஓட்டிகள் பாதாகையில் உள்ள பெயர் சரிவர தெரியாததால் குழப்பம் அடையும் சூழ்நிலை உருவாகியுள்ளது. எனவே வாகன ஓட்டிகளின் நலன் கருதி நெடுஞ்சாலைதுறை அதிகாரிகள் உடனடியாக நேரில் சென்று பார்வையிட்டு ஊர் பெயர் பதாகையை சூழ்ந்துள்ள செடி கொடிகளை அப்புறப்படுத்தி பதாகை சரிவர தெரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள், வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

The post காங்கயம் அருகே சாலையோரம் வளர்ந்துள்ள புதரால் ஊர் பெயர் பலகை மறைப்பு appeared first on Dinakaran.

Tags : Gangaim ,Kangayam ,
× RELATED வைக்கோல் ஏற்றி வந்த வேன் மின் ஒயர் உரசி தீ பற்றியது