×

தூத்துக்குடி மாவட்டத்தில் 4ம் தேதி முதல் மின் நுகர்வோர் குறைதீர் கூட்டம்

தூத்துக்குடி, ஜூலை 2:, தூத்துக்குடி மின்வாரிய மேற்பார்வை பொறியாளர் குருவம்மாள் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: திருச்செந்தூர் கோட்ட மின் நுகர்வோர்கள் பயன்பெறும் வகையில் வரும் 4ம் தேதி(செவ்வாய்) பகல் 11மணிக்கு படுக்கப்பத்து உதவி பொறியாளர் அலுவலகத்தில் மின்நுகர்வோர் குறை தீர்க்கும் நாள் கூட்டம் நடக்கிறது. இதனைத்தொடர்ந்து, 11ம் தேதி தூத்துக்குடி நகர்புற கோட்டத்திற்கு ஸ்டேட் பாங்க் காலனி உதவி பொறியாளர் அலுவலகத்திலும், 18ம் தேதி கோவில்பட்டி கோட்டத்திற்கு கோவில்பட்டி உதவி பொறியாளர் அலுவலகத்திலும், 25ம் தேதி தூத்துக்குடி ஊரக கோட்டத்திற்கு சூரங்குடி உதவி பொறியாளர் அலுவலகத்திலும் பகல் 11மணி அளவில் மின்நுகர்வோர் குறை தீர்க்கும் நாள் கூட்டம் நடக்கிறது. இதில், மின் நுகர்வோர்கள் கலந்துகொண்டு பயன்பெறுமாறு கேட்டுக்கொள்கிறேன் என்று அதில் தெரிவித்துள்ளார்.

The post தூத்துக்குடி மாவட்டத்தில் 4ம் தேதி முதல் மின் நுகர்வோர் குறைதீர் கூட்டம் appeared first on Dinakaran.

Tags : Thoothukudi district ,Thoothukudi ,Superintending Engineer ,Thoothukudi Power Board ,Guruvammal ,Tiruchendur district ,
× RELATED கடைசியாக வசித்த ஒரே ஒரு முதியவரும்...