×

மகளின் மாற்று சான்றிதழ் கேட்டு பள்ளி நுழைவாயிலில் பெற்றோர் தர்ணா

செங்கல்பட்டு, ஜூலை 2: செங்கல்பட்டு கிருஷ்ணா நகர் பகுதியை சேர்ந்தவர் முரளிதரன். இவரது மகள் ஜனவர்ஷினி (11). பழவேலி பகுதியில் உள்ள தனியார் பள்ளியில் 6ம் வகுப்பு படித்து வந்தார். இந்நிலையில் கடந்த ஆண்டு ஜனவர்ஷினி தனது பெற்றோரிடம், ஆசிரியை ஒருவர் தன்னிடம் கடுமையாக நடந்து கொள்வதாகவும், அடிப்பதாகவும் கூறியுள்ளார். இதுபற்றி பள்ளி நிர்வாகத்திடம் முரளிதரன் கேட்டுள்ளார். பிறகு மகளுக்கு மாற்றுச் சான்றிதழ் கொடுக்குமாறு கேட்டுள்ளார். ஆனால் பள்ளி நிர்வாகம் மாற்றுச் சான்றிதழ் கொடுக்காமல் இழுத்தடித்து வந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில் கோடை விடுமுறைக்கு பின் பள்ளி திறந்தவுடன் மாணவி ஜனவர்ஷினி பள்ளிக்கு செல்லாமல் இருந்துள்ளார். எனவே, மாற்றுச் சான்றிதழ் தர மறுப்பதாக கூறி முரளிதரன் நேற்று பள்ளி நுழைவாயிலில் குடும்பத்துடன் அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டார். தகவலறிந்து வந்த செங்கல்பட்டு தாலுகா போலீசார் முரளிதரனிடம் சமரச பேச்சுவார்த்தை நடத்தினர். மேலும் மாணவியின் மாற்றுச் சான்றிதழை முரளிதரனிடம் கொடுத்து அனுப்புமாறு போலீசார், பள்ளி நிர்வாகத்தை அறிவுறுத்தனர். பள்ளிவாசலில் மாணவியுடன் பெற்றோர் போராட்டத்தில் ஈடுபட்டது பரபரப்பை ஏற்படுத்தியது.

The post மகளின் மாற்று சான்றிதழ் கேட்டு பள்ளி நுழைவாயிலில் பெற்றோர் தர்ணா appeared first on Dinakaran.

Tags : Chengalpattu ,Muralitharan ,Krishna Nagar ,Janavarshini ,Palaveli ,Dinakaran ,
× RELATED செங்கல்பட்டு அல்லானூர் அருகே...