×

மகளிர் தொண்டரணி தலைவர் மதியழகன் எம்எல்ஏவிடம் வாழ்த்து

போச்சம்பள்ளி, ஜூலை 2: கிருஷ்ணகிரி கிழக்கு மாவட்ட திமுக மகளிர் தொண்டரணி தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்ட ஆதிமகேந்திரன், மாவட்ட திமுக செயலாளர் மதியழகன் எம்எல்ஏவிடம் வாழ்த்து பெற்றார். கிருஷ்ணகிரி கிழக்கு மாவட்ட திமுக மகளிர் தொண்டரணி தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்ட ஆதிமகேந்திரன் மற்றும் திமுக மகளிரணியினர் கிருஷ்ணகிரி மாவட்ட திமுக செயலாளர் மதியழகன் எம்.எல்.ஏ.வை சந்தித்து வாழ்த்து பெற்றனர். மேலும், மாவட்ட ஊராட்சிக்குழு தலைவர் மணிமேகலை நாகராஜ், மாவட்ட திமுக அவைத்தலைவர் தட்ரஅள்ளி நாகராஜ் ஆகியோரை சந்தித்து சால்வை அணிவித்து வாழ்த்து பெற்றனர். நிகழ்ச்சியில் ஊராட்சி மன்றத் தலைவர்களின் கூட்டமைப்பு மாவட்ட தலைவர் மாதவி முருகேசன், திமுக மாவட்ட பிரதிநிதிகள் மணி, சந்துரு, பாரதகோவில் முருகன், அவைத்தலைவர் ராமமூர்த்தி, ஒன்றிய துணை செயலாளர்கள் தட்ரஅள்ளி ரமேஷ், கோவிந்தசாமி, சண்முகம், ஊராட்சி மன்றத் தலைவர்கள் வெண்ணிலா முருகேசன், சுப்பிரமணி, மடம் மகேஷ், லட்சுமி, சக்திராஜராம், பாரத் சரவணன், கீதா கோவிந்தசாமி, பாஸ்கர், நாகமணி, காவேரி, மகேஸ்வரி சங்கர், மாவட்ட கவுன்சிலர் சங்கர், கவுன்சிலர் சுரேஷ், உமாபதி, நித்யாசக்தி, பார்வதி சரணன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

The post மகளிர் தொண்டரணி தலைவர் மதியழகன் எம்எல்ஏவிடம் வாழ்த்து appeared first on Dinakaran.

Tags : Women's Movement ,Mathiazhagan ,MLA ,Bochambally ,Adhimahendran ,DMK ,women's rally ,president ,Krishnagiri East district ,
× RELATED டிடிவி, ஓபிஎஸ் டெபாசிட் வாங்குவதே பெரிய விஷயம்: அதிமுக எம்எல்ஏ பளீர்