×

துணி உற்பத்தியாளர்களிடம் ரூ.10 கோடி மோசடி தாய், மகன் கைது

பல்லடம்: பல்லடத்தில் காடா துணி உற்பத்தியாளர்களிடம் ரூ.10 கோடி மோசடி செய்த தாய், மகனை போலீசார் கைது செய்தனர். ஈரோட்டை சேர்ந்த மவுலீஸ்வரன், திருப்பூர் மாவட்டம் பல்லடம் பகுதி காடா துணி உற்பத்தியாளர்களிடம் மொத்த வியாபாரத்திற்கு துணிகளை ஏற்றுமதி செய்வதாக கடந்த 2 ஆண்டாக பல நிறுவனங்களில் வரவு செலவு செய்துள்ளார். முதல் 2 மாதம் வாங்கும் காடா துணிகளுக்கு முறையாக பணத்தை செலுத்திவிட்டு மூன்றாவது மாதத்தில் பாதி மட்டும் கொடுத்துவிட்டு மீதி பணத்திற்கு தனது தாய் மலர்க்கொடி பெயரில் வங்கி காசோலையை கொடுத்துள்ளார். அது வங்கியில் பணம் இல்லை என திரும்பியுள்ளது. இவ்வாறு ஏராளமான காடா உற்பத்தியாளர்களிடம் ரூ.10 கோடி வரை காசோலை மோசடி செய்துவிட்டு தாய் மலர்க்கொடியுடன் மவுலீஸ்வரன் கடந்த 6ம் மாதத்துக்கு முன்பு தலைமறைவானார்.

இவரால் பாதிக்கப்பட்ட சின்னியகவுண்டம்பாளையத்தை சேர்ந்த ஒருவர் நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்த நிலையில் மவுளீஸ்வரனின் குடும்பத்தாரை பிடிக்க நீதிமன்றம் பிடியாணை பிறப்பித்தது. இந்நிலையில், நேற்று முன்தினம் இரவு பல்லடம் போலீசார் மவுலீஸ்வரன் (28) மற்றும் அவரது தாய் மலர்க்கொடி (46) ஆகிய இருவரையும் கைது செய்து காவல் நிலையம் அழைத்து வந்தனர். இதனை அறிந்த பாதிக்கப்பட்டவர்கள் பல்லடம் காவல் நிலையத்தை முற்றுகையிட்டனர். அவர்களை போலீசார் சமரசம் செய்து அனுப்பினர். பின்னர் மவுலீஸ்வரன், மலர்க்கொடி ஆகிய இருவரையும் பல்லடம் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

The post துணி உற்பத்தியாளர்களிடம் ரூ.10 கோடி மோசடி தாய், மகன் கைது appeared first on Dinakaran.

Tags : Palladam ,Dinakaran ,
× RELATED திருநங்கையை தாக்கியவர் கைது