×

வெங்கையா நாயுடு, அகிலேஷ் யாதவுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் பிறந்தநாள் வாழ்த்து

சென்னை: நேற்று பிறந்தநாள் கொண்டாடிய முன்னாள் துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு, உத்தரபிரதேச மாநில எதிர்க்கட்சி தலைவர் அகிலேஷ் யாதவுக்கு தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார். இது தொடர்பாக முதல்வர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள டிவிட்டர் பதிவில் கூறியிருப்பதாது: முன்னாள் குடியரசுத் துணைத் தலைவர் வெங்கையா நாயுடுக்கு பிறந்தநாள் வாழ்த்துகள். அரசியல் கட்சி எல்லைகளைக் கடந்து அனைவரிடமும் நட்பு பாராட்டும் உங்கள் திறத்துடன், தங்களது சொல் நயமும், ஈர்ப்பும் எப்போதும் ஒளிவீசிக்கொண்டு இருந்து வந்துள்ளது. இந்தச் சிறப்பான நாளில் தாங்கள் நல்ல உடல்நலத்துடனும் மகிழ்ச்சியுடனும் இருக்க வேண்டும்.மேலும் உத்தரபிரதேசத்தின் துணிச்சலான எதிர்க்கட்சி தலைவர் அகிலேஷ் யாதவுக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள். வரும் ஆண்டு வெற்றிகரமான ஆண்டாக அமைய வாழ்த்துக்கள்.

The post வெங்கையா நாயுடு, அகிலேஷ் யாதவுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் பிறந்தநாள் வாழ்த்து appeared first on Dinakaran.

Tags : Venkaiah Naidu ,Akilesh Yadav ,CM. G.K. ,Stalin ,Chennai ,Former ,Vice President ,Venkaya Naidu ,Uttar Pradesh ,State Opposition Leader ,CM ,G.K. ,
× RELATED அகிலேஷ் யாதவ் கன்னாஜ் தொகுதியில் போட்டி