×

கொரோனா ஊரடங்கு முடிந்த நிலையில் கம்போடியாவில் களைகட்டியது ‘பீர் யோகா’

கம்போடியா: கொரோனா ஊரடங்கு முடிந்த நிலையில் கம்போடியாவில் ‘பீர் யோகா’ களைகட்டி வருகிறது. உள்நாட்டு மக்கள் மட்டுமின்றி வௌிநாட்டினரும் கலந்து கொள்கின்றனர். மன அழுத்தை குறைக்கவும், மனதை ஒருமுகப்பத்தவும் யோகா பயிற்சிகளை உலக முழுவதும் மக்கள் மேற்கொள்வார்கள். ஆனால், ேயாகா பயிற்சி மேற்கொள்ளும் ேபாது சிலர் மற்றவர்களின் கவனத்தை ஈர்க்கும் வகையில் ஆடு யோகா, நாய் யோகா, வான்வழி யோகா போன்ற பல வித்தியாசமான வகைகளை மேற்கொள்கின்றனர். அந்த வகையில் இப்போது ​‘பீர் யோகா’ பிரபலமாகி வருகிறது. கம்போடியாவின் தலைநகர் புனோம் பென்னில் உள்ள பயிற்சி கூடம் கொரோனா ஊரடங்குக்கு பின்னர் திறக்கப்பட்டது. மிகவும் உற்சாகத்துடன் கலந்து கொண்ட இளைஞர்கள் புதிய வகையிலான ேயாகா பயிற்சியை மேற்கொண்டனர். ‘பீர் யோகா’ என்று கூறப்படும் இந்த யோகா செய்யும் போது, அருகில் பீர் பாட்டில் அல்லது கிளாசில் வைக்கப்படுகிறது. ஒரு கையில் யோகா செய்து கொண்டே, மற்றொரு கையில் பீர் குடிக்க வேண்டும். இந்த யோகா மிகவும் பிரபலமடைந்து வருவதால், உள்ளூர் மக்கள் மட்டுமின்றி வெளிநாட்டவர்களும் பங்கேற்கின்றனர். யோகாவின் ஒவ்வொரு அசைவுக்கு பிறகும், அவர்கள் ஒரு ‘கப்’ பீர் குடிக்கின்றனர். ஸ்ரேலைன் பச்சா என்ற பெண் ராய்ட்டர் செய்தி நிறுவனத்திடம் அளித்த பேட்டியில், ‘பீர் யோகா மிகவும் வேடிக்கையாக இருக்கிறது. இது பாரம்பரிய யோகாவைப் போல் இல்லை. நண்பர்களுடன் இணைந்து இந்த யோகாவை மேற்கொள்கிறோம். இது எனக்கு மிகவும் மகிழ்ச்சியைத் தருகிறது’ என்றார். இதுகுறித்து பீர் யோகா பயிற்சியாளர் கூறுகையில், ‘யோகாவால் மனதை ஒரு முகப்படுத்த முடியும். அதனுடன் பீர் குடிப்பதால் கிடைக்கும் இன்பத்தை கலக்கும்போது அதிகபட்ச பரவசநிலையை அடைய முடியும்’ என்றார். ஆனால், நெட்டிசன்கள் பலர் பீர் யோகா செய்வது குறித்து அதிருப்தி தெரிவித்துள்ளனர். …

The post கொரோனா ஊரடங்கு முடிந்த நிலையில் கம்போடியாவில் களைகட்டியது ‘பீர் யோகா’ appeared first on Dinakaran.

Tags : Beer Yoga ,Cambodia ,Corona lockdown ,Vauinatari ,Beer ,Dinakaran ,
× RELATED ராணுவ தளத்தில் பயங்கர வெடிவிபத்து கம்போடிய வீரர்கள் 20 பேர் உயிரிழப்பு