×

முதுமலை யானை தம்பதி கதையான தி எலிபெண்ட் விஸ்பரர்ஸ் இயக்குநருக்கு விருது: இங்கிலாந்து அரசர் 3ம் சார்லஸ் வழங்கினார்

லண்டன்: இங்கிலாந்தில் ‘எலிபென்ட் பேமிலி’ என்ற வனவிலங்கு பாதுகாப்பு அமைப்பானது கடந்த 2003ம் ஆண்டு தற்போது ராணியாக இருக்கும் கமீலாவின் மறைந்த சகோதரர் மார்க் ஷாண்டால் உருவாக்கப்பட்டது. இவர் யானைகள் மற்றும் வனவிலங்குகளை பாதுகாப்பதில் அதிக ஆர்வம் கொண்டவர். அனிமல் பால் எனப்படும் பழங்குடியின சமூகத்தின் விழா லான்கஸ்டர் அவுசில் புதன்கிழமை நடைபெற்றது. இந்த விழாவில் இங்கிலாந்து மன்னர் மூன்றாம் சார்லஸ், ராணி கமீலா ஆகியோர் கலந்து கொண்டனர். விழாவில் சிறந்த குறும்படத்திற்கான ஆஸ்கர் விருது பெற்ற தி எலிபெண்ட் விஸ்பரர்ஸ் படத்தின் இயக்குநரான கார்த்திகி கோன்சால்வ்ஸ்க்கு யானை குடும்ப சுற்றுச்சூழல் ‘டாரா’ விருது வழங்கப்பட்டது.

இந்த குறும்படம் முதுமலை யானை தம்பதிகளை மையமாக வைத்து எடுக்கப்பட்டது ஆகும். அரசர் மூன்றாம் சார்லஸ் மற்றும் ராணி கமீலா ஆகியோர் விருது வழங்கி கவுரவித்தனர். வனவிலங்கு பாதுகாப்பு தொண்டு நிறுவனமான யானை குடும்பத்துக்கு அங்கீகாரம் அளிக்கும் வகையில் யானை சிலை விருதாக வழங்கப்பட்டது. மேலும் 70 ஆதிவாசி கலைஞர்களின் உண்மையான யானைகள் கூட்டமைப்புக்கு(டிஆர்இசி) மார்க் ஷான்ட் விருதும் வழங்கி கவுரவிக்கப்பட்டது. டிஆர்இசி கடந்த 5 ஆண்டுகளாக லென்டானா எனப்படும் செடியை கொண்டு யானை சிற்பங்களை வடிவமைக்கும் உள்நாட்டு கைவினைஞர்களின் பிரதிநிதியாக பணியாற்றியதற்காக இந்த விருது வழங்கப்பட்டது.

The post முதுமலை யானை தம்பதி கதையான தி எலிபெண்ட் விஸ்பரர்ஸ் இயக்குநருக்கு விருது: இங்கிலாந்து அரசர் 3ம் சார்லஸ் வழங்கினார் appeared first on Dinakaran.

Tags : King Charles III ,England ,London ,Elephant Family ,Kamilla ,Queen ,
× RELATED இந்தியருக்கு 16 ஆண்டு சிறை