×

சாத்தூர் வெங்கடாசலபதி கோயிலில் ஜூலை 3ம் தேதி ஆனி பிரமோற்சவ தேரோட்டம்

சாத்தூர்: சாத்தூர் வெங்கடாசலபதி கோயிலில் ஜூலை 3ம் தேதி ஆனி பிரமோற்சவ தேரோட்டம் நடைபெறுகிறது. இதற்காக தேர் முழுவீச்சில் நடைபெற்று வருகிறது.  விருதுநகர் மாவட்டம் சாத்தூரில் 500 ஆண்டு பழமை வாயந்த வெங்கடாசலபதி கோயில் உள்ளது. இக்கோயிலில் ஆனி பிரமோற்சவ திருவிழா கடந்த ஞாயிற்றுகிழமை கொடியோற்றத்துடன் துவங்கியது. 11 நாள் நடைபெறும் இத்திருவிழாவில் ஒவ்வொரு நாளும் பெருமாள் பெரிய கருட வாகனம், சிறிய கருட வாகனம், சேஷ வாகனம், குதிரை வாகனம் உள்ளிட்ட வாகனங்களில் எழுந்தருளி நான்குமாட வீதிகளில் வீதி உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.

ஆறாம் நாள் திருவிழாவான நேற்று இரவு பெருமாள் பெரியகருட வாகனத்தில் எழுந்தருளி வடக்கு ரத, தெற்கு ரத வீதிகள் வழியாக வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார். இதில் ஏராளமானோர் கலந்து கொண்டு பெருமாளை தரிசனம் செய்தனர். ஆனி பிரமோற்சவ திருவிழாவின் முக்கிய நிகழ்வான ஆனி தேரோட்டம் வரும் 3ம் தேதி நடைபெறுகிறது. இதற்காக தேர் முழுவீச்சில் தயாராகி வருகிறது.

The post சாத்தூர் வெங்கடாசலபதி கோயிலில் ஜூலை 3ம் தேதி ஆனி பிரமோற்சவ தேரோட்டம் appeared first on Dinakaran.

Tags : Ani Pramozhava ,Sathur Venkadasalapati Temple ,Ani ,Sathur Venkatasalapati Temple ,Cheru ,Sattur ,Venkatasalapati Temple ,
× RELATED சிதம்பரம் நடராஜர் கோயிலில் மே 1ம் தேதி...