×

சென்னைக்கான பல்வேறு வளர்ச்சி திட்டங்கள் திமுக ஆட்சியில் கொண்டுவரப்பட்டது: முதல்வர் மு.க.ஸ்டாலின் பேச்சு

சென்னை: கொளத்தூர் ஸ்டீபன் சாலையில் புதிதாக கட்டப்பட்ட”செங்கை சிவம்” மேம்பாலத்தை முதல்வர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார். ஸ்டீபன் சாலையில் ஓட்டேரி கால்வாயின் குறுக்கே ரூ.66.83 கோடியில் செங்கை சிவம் கட்டப்பட்டுள்ளது. பின்னர் நடைபெற்ற நிகழ்ச்சியில் பேசிய முதல்வர்; செங்கை சிவம் பெயரில் அமைந்த பாலம் திறப்பு விழா நிகழ்ச்சியில் பங்கேற்றதில் மகிழ்ச்சி அடைந்தேன். தியாக செம்மல்களின் பெயர்களை பாலங்கள், சுரங்கப் பாதைகளுக்கு சூட்டி மகிழ்ந்தார் கலைஞர். சென்னைக்கான பல்வேறு வளர்ச்சி திட்டங்கள் திமுக ஆட்சியில் கொண்டுவரப்பட்டது.

அண்ணா மேம்பாலம் இன்றுடன் 50 ஆண்டுகால வரலாற்றை எட்டியுள்ளது. கத்திப்பாரா பாலம், கோயம்பேடு பாலம், செம்மொழி பூங்கா, டைடல் பார்க், கடல்நீரை குடிநீராக்கும் திட்டம் கலைஞரால் கொண்டு வரப்பட்டது. மெட்ரோ திட்டம், கோயம்பேடு பேருந்து நிலையம், அடையாறு ஐ.டி. பார்க், மூலக்கடை பாலம், வியாசர்பாடி பாலம் திமுக ஆட்சியில் கொண்டுவரப்பட்டவை. சென்னையின் மேம்பாட்டுக்காக ஏராளமான திட்டங்களை கொடுத்தது திமுக தலைமையிலான அரசு. சென்னையில் மழை, வெள்ள பாதிப்புகளை தடுக்க ரூ.3,184 கோடியில் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

கடந்த ஆண்டு பருவமழையின்போது வெள்ளத்தில் இருந்து சென்னை எப்படி காப்பாற்றப்பட்டது என்பது உங்களுக்கு தெரியும். மழை நீர் வடிகால் பணி, மெட்ரோ ரயில் பணி காரணமாக சில சாலைகள் சேதம் அடைந்துள்ளது; சீரமைக்கும் பணிகள் நடக்கிறது. நான் மேயராக இருந்தபோது சென்னை மாநகராட்சி சார்பில் 10 பாலங்கள் கட்ட முடிவு செய்யப்பட்டது. தமிழகத்திற்கு தேவையான உட்கட்டமைப்பு வசதிகளை அரசு மேற்கொண்டு வருகிறது எனவும் கூறினார்.

The post சென்னைக்கான பல்வேறு வளர்ச்சி திட்டங்கள் திமுக ஆட்சியில் கொண்டுவரப்பட்டது: முதல்வர் மு.க.ஸ்டாலின் பேச்சு appeared first on Dinakaran.

Tags : Chennai ,Djagam ,CM. G.K. Stalin ,Brick Shivam ,Kolathur Stephen Road ,Chief Minister ,MC. G.K. Stalin ,Otteri ,Stephen Road ,CM ,G.K. Stalin ,Dinakaran ,
× RELATED சென்னை ரெட்டேரி அருகே புத்தகரத்தில்...