×

கீரனூரில் தவணை கட்டாததால் சிறுமியை கடத்திய புகாரில் நடவடிக்கை எடுக்க ஆட்சியர் உத்தரவு..!!

புதுக்கோட்டை: கீரனூரில் தவணை கட்டாததால் சிறுமியை கடத்திய புகாரில் நடவடிக்கை எடுக்க ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார். கீரனூரில் இயங்கி வரும் நிதி நிறுவனத்தில் மருதூரை சேர்ந்த கூலித்தொழிலாளி வனத்து ராஜா என்பவர் மாதாந்திர தவணையில் ரூ.50 ஆயிரம் கடன் பெற்றிருந்தார். இந்நிலையில் தவணைத்தொகையை செலுத்தாமல் காலம் தாழ்த்தி வந்துள்ளார்.

இதையடுத்து நிதி நிறுவனத்தில் ஊழியராக பணிபுரியும் பெரிய சூரியூரை சேர்ந்த விக்னேஷ் என்பவர் பணம் வசூலிப்பதற்காக வனத்து ராஜா வீட்டுக்கு சென்றுள்ளார். அப்போது வனத்து ராஜா வேலைக்கு சென்றுள்ளதாக அவரது மகள் கூறியுள்ளார். இதனை தொடர்ந்து சிறுமியை அழைத்துக்கொண்டு விக்னேஷ் நிதி நிறுவனத்துக்கு சென்று விட்டார். இந்நிலையில் வீட்டுக்கு வந்த வனத்து ராஜா, தனது மகளை காணாமல் தேடிய போது நிதிநிறுவன ஊழியர் அவரை அழைத்து சென்றதாக அப்பகுதி மக்கள் கூறினர்.

இதனால் அதிர்ச்சியடைந்த அவர் கீரனூர் போலீசாரிடம் தனது மகளை நிதிநிறுவன ஊழியர் கடத்தி சென்றதாக புகார் அளித்தார். இதன்பேரில் சப்-இன்ஸ்பெக்டர் தலைமையிலான போலீசார் சிறுமியை கடத்தி வைத்திருந்த நிதி நிறுவனத்திற்கு சென்று விசாரணை நடத்தி அங்கிருந்து சிறுமியை மீட்டு மீட்டனர். இதையடுத்து, சிறுமியை கடத்தி சென்றவரை போலீசார் கைது செய்தனர். கடன் தொகையை செலுத்தாததால் தொழிலாளியின் மகளை நிதிநிறுவன ஊழியர் கடத்தி சென்ற சம்பவம் கீரனூரில் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில் பாதிக்கப்பட்ட கூலித் தொழிலாளி வனத்துராஜாவின் வீட்டிற்கு நேரில் சென்று சிறுமியிடம் விஏஓ விசாரணை நடத்தினார்.

The post கீரனூரில் தவணை கட்டாததால் சிறுமியை கடத்திய புகாரில் நடவடிக்கை எடுக்க ஆட்சியர் உத்தரவு..!! appeared first on Dinakaran.

Tags : Keeranur ,Pudukkotta ,
× RELATED திருமாந்துறை ஊராட்சி கீரனூரில்...