×

பெண் நிருபருக்கு ஆபாச மெசேஜ் அனுப்பிய கட்சி நிர்வாகி கைது

திருவனந்தபுரம்: கொச்சி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள கேரள மக்கள் ஜனநாயக கட்சித் தலைவர் மதானியின் உடல்நலம் குறித்து செய்தி சேகரிப்பதற்காக செல்போனில் தொடர்புகொண்டபோது ஆபாச தகவல்களை அனுப்பிய மதானி கட்சியின் பொதுச் செயலாளர் நிசார் மேத்தரை போலீசார் கைது செய்தனர். பெங்களூரு தொடர் குண்டு வெடிப்பு வழக்கு தொடர்பாக கேரளாவை சேர்ந்த மக்கள் ஜனநாயக கட்சித் தலைவர் அப்துல் நாசர் மதானி கைது செய்யப்பட்டு பெங்களூரு சிறையில் அடைக்கப்பட்டார்.

இந்நிலையில் உடல்நலக் குறைவு ஏற்பட்ட தந்தையை சந்திப்பதற்காக கேரளா செல்ல மதானிக்கு உச்சநீதிமன்றம் 12 நாள் தற்காலிக அனுமதி வழங்கியது. இதைத் தொடர்ந்து மதானி பெங்களூருவிலிருந்து விமானம் மூலம் கொச்சி சென்றார். கொச்சியில் வைத்து அவருக்கு திடீர் உடல்நலக் குறைவு ஏற்பட்டதால் ஒரு தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அப்போது மதானியின் உடல் நலம் குறித்து செய்தி சேகரிப்பதற்காக ஒரு மலையாள பெண் நிருபர், மக்கள் ஜனநாயக கட்சியின் பொதுச் செயலாளரான நிசார் மேத்தர் என்பவரை செல்போன் மூலம் தொடர்பு கொண்டார்.

அப்போது அவர் பெண் நிருபரிடம் ஆபாச தகவல்களை அனுப்பியதாக கொச்சி கடவந்திரா போலீசில் புகார் தெரிவிக்கப்பட்டது. நேற்று இரவு அவரை போலீசார் விசாரணைக்காக கடவந்திரா போலீஸ் நிலையத்திற்கு வரவழைத்தனர். அவரது செல்போனை பரிசோதித்ததில் பெண் நிருபருக்கு ஆபாச தகவல்களை அனுப்பியது நிரூபணமானது. இதையடுத்து நிசார் மேத்தரை போலீசார் கைது செய்தனர்.

The post பெண் நிருபருக்கு ஆபாச மெசேஜ் அனுப்பிய கட்சி நிர்வாகி கைது appeared first on Dinakaran.

Tags : Party ,Thiruvananthapuram ,Kerala People's Democratic Party ,Madani ,Kochi ,
× RELATED சட்டப்பேரவை தேர்தல் முடிவுகள்...